ஆன்மிகம்

நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணம் 48 நாட்களில் வீடு தேடி வர இது போல் ஒரு தடவை செய்தால் போதும். உங்க பணம் திரும்ப கிடைக்கும்.

நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணம் 48 நாட்களில் வீடு தேடி வர இது போல் ஒரு தடவை செய்தால் போதும்.
உங்க பணம் திரும்ப கிடைக்கும்.

சிலர் , பிறரை ஏமாற்றி சொத்துக்கள், பணம் அபகரிப்பதும், அல்லது கடனாக பணத்தை வாங்கி திரும்பத் தராமல் ஏமாற்றுவது என செய்கின்றனர்.

அதை திரும்ப தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படிப்பட்டவர்களிடமிருந்து நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

சிலரிடம் பழகிய காரணத்திற்காக அவருக்கும் பணம் கொடுத்து உதவி செய்திருப்போம்.

ஆனால் அந்த பணத்தை திரும்பித்தராமல் ஏமாற்றியிருப்பார்கள்.

இன்னும் சிலர் பணத்தை திரும்பி தருகிறேன் என்று கூறி இழுத்தடித்துருப்பார்கள்.

இப்படி யாராவது நம்பி பணம் அல்லது நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள் சில பரிகாரங்களை செய்து வந்தால், கடன் வாங்கியவர்கள் மனம் மாறி வாங்கிய பணம் அல்லது நகைகளை வீடு தேடி வந்து கொடுத்துவிடுவார்கள்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பண வரவும் அதிகரிக்க துவங்கும்.

செய்யவேண்டிய பரிகாரம்

பொதுவாக ஒரு வீட்டின் தெற்கு பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும்.

ஏனெனில் தெற்கு பகுதியில் தான் செவ்வாய்க்கு உரியப்பகுதியாகும்.

செவ்வாயை நோக்கி பரிகாரம் செய்து வேண்டும்பொழுது பலன் கிடைக்காமல் போகாது, அதேபோல் வருவாயும் நிச்சயம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் பூஜை அறையில் அல்லது ஏதேனும் ஒரு அறையில் நல்லெண்ணெய் ஊற்றி, 7 விளக்குகளை தெற்கு நோக்கி எரியும்படி ஏற்றிவைத்து, நீங்கள் ஏமாந்த பணம் திரும்பி கிடைக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும்.

இவ்வாறு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபட்டால், நீங்கள் ஏமாந்த அல்லது கடனாக கொடுத்து பணம் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரியவைக்க வேண்டும்.

செவ்வாய்கிழமையில் காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக இந்த தீப பரிகாரத்தை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

தீபம் ஏற்றி வைத்து செவ்வாய் பகவானையும், குலதெய்வத்தையும், வேண்டிக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வருவது சிறப்பான பலனை கொடுக்கும்.

Related Articles

Back to top button