வாடகை கொடுத்தது போதும்! இந்த மூன்று பொருட்களை வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் சொந்த வீடு கட்டும் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும்.
வாடகை கொடுத்தது போதும்! இந்த மூன்று பொருட்களை வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் சொந்த வீடு கட்டும் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும்.
மூன்று பொருட்களின் மூலம் செய்யும் ஓர் எளிய பரிகாரத்தினால் உங்கள் கனவில்லத்திற்கு இன்றே அஸ்த்திவாரம் போடுவோம் வாருங்கள்.
நம் வீட்டுப் பூஜை அறையில் தினம்தோரும் ஏற்றப்படும் விளக்கினால் நம் மனங்கள் ஒளி பெற்று நம் வாழ்வு பிரகாசமடைகின்றது.
காமாட்சி விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கு நம் பூஜை அறைகளில் ஏற்ற சிறந்த விளக்குகள் ஆகும்.
இவ் விளக்குகள் பித்தளை, வெள்ளி உலோகத்தினால் அமைந்திருத்தல் சிறப்பான அம்சமாகும். எவர் சில்வர் விளக்குகளைப் பயன்படுத்தாதீர்கள்.
நாம் ஏற்றும் காமாட்சி விளக்கினை எப்பொழுதும் ஓர் தட்டின் மீது வைத்து ஏற்றிப் பழகிக் கொள்ளல் வேண்டும்.
அத் தட்டில் சில பொருட்களை இட்டு அதன் மீதி விளக்கினை வைத்து தீபம் ஏற்றுதலே பரிகாரம் ஆகும். விளக்கேற்றும் போது முதலில் நல்லெண்ணெய் அல்லது பசுநெய் ஊற்றிப் பின் பஞ்சுத் திரியினை இரண்டாகத் திரித்து போட்டு விளக்கினை ஏற்றுங்கள்.
இவ்வாறு வழிபடுவதனால் சுக்கிர பகவான் அருள் நமக்கு கிடைத்துப் பணவரவு அதிகரிக்கும், கடன் பிரச்சினைகள் நீங்கும் குறிப்பாக சொந்த வீடு வாங்கும் யோகமும் கைகூடும்.
வாரா வாரம் நம் வீட்டுச் சுவாமி மாடங்களையும் பூஜைப் பொருட்களையும் துப்பரவு செய்து கொள்வோம்.
துப்பரவு செய்த கையோடு உங்கள் விளக்கு வைக்கும் இடத்தில் பச்சிரிசியினால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.
கோளத்தின் மீது மனை வைத்து அதன் மீது சிறிய தட்டினை வைத்து முறைப்படித் தீபம் ஏற்றுங்கள்.
குறித்த தட்டின் மேல் அதாவது விளக்கின் அடியில் நான் கூறப்போகும் மூன்று பொருட்களில் ஏதாவது ஒன்றினை வையுங்கள்.
தேவையான அட்ஸதை, சர்க்கரை, ஐந்து ரூபாய் நாணயக் குற்றி.
பச்சரிசி, மஞ்சள் மற்றும் சிறிதளவு நெய். இப் பொருட்களை சிறிய தட்டில் இட்டு கலந்து கொள்ளுங்கள்.
ஒரு துளி நெய்யின் அளவே போதுமானதாகும். இக் கலவையை “அட்ஸதை” என்பர். நம் வீடுகளில் நல்ல காரியங்கள் நடக்கும் போது அட்ஸதை கலக்கி வைப்போம் கல்யாணத்தில் அட்ஸதை தூவி மணமக்களை ஆசிர்வதிப்போம்.
இவ் அட்ஸதை ஆனது மகாலட்சுமி குடிகொள்ளும் மங்கல பொருள் ஆகும்.
அட்ஸதை இல்லாத பட்சத்தில் சர்க்கரையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்க்கரை ஆனது வெள்ளை நிறத்தினாலானது. சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நிறம் வெள்ளை நிறம். சுக்கிர பகவானின் அதிபதியாக விளங்குபவள் மகாலட்சுமி ஆவாள்.
மகாலட்சுமியை அழைத்து நம் வீட்டில் தங்க வைத்தலுக்கு வெள்ளை நிறத்தாலான இனிப்பு பொருளைப் பரிகாரத்திற்குப் பயன்படுத்துகிறோம்.
அட்ஸதை அல்லது சர்க்கரையினை விளக்கின் கீழ் வைத்து தினமும் விளக்கேற்றுங்கள். வாரா வாரம் நம் பூஜைப் பொருட்களை சுத்தம் செய்யும் போது இவற்றை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து சொந்த வீடு வாங்க வேண்டும் எனும் கனவுடன் வாழ்பவர்கள் ஐந்து ரூபாய் நாணயக் குற்றியை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஐந்து ரூபாய் நாணய குற்றியினை விளக்கிற்க்குள் வைத்து தினமும் விளக்கேற்றிக் கொள்ளுங்கள். வாரா வாரம் புதிய நாணய குற்றியே பயன் படுத்த வேண்டும்.
நம் பூஜைப் பொருட்களை சுத்தம் செய்யும் போது இவற்றையும் சுத்தம் செய்து சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
சேர்த்து வைத்த நாணயக் குற்றிகளை நாம் புதிய வீடு கட்டும் போதோ அல்லது வீடு வாங்கும் போதோ கோவில் உண்டியலில் போட்டுக் கொள்ளுங்கள் அல்லது கோவிலிற்கு ஏதாவது பொருள் வாங்கிக் கொடுங்கள்.
குறிப்பாக தினமும் விளக்கேற்றும் போது நறுமணம் நிறைந்த மலரான மல்லிகை பூவையும் வைத்து விளக்கேற்றி வழிபட ஓர் நாள் உங்கள் சொந்த வீடு கை வந்து சேரும்.