இந்த பொருட்களை மறத்தும் யாருக்கும் கொடுக்காதீர்கள் கொடுத்தால் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்படும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்
இந்த பொருட்களை மறுத்தும் யாருக்கும் கொடுக்காதீர்கள் கொடுத்தால் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்படும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்
இந்த பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்தால் மகாலக்ஷ்மி உங்கள் வீட்டை விட்டு நிரந்தரமாக சென்று விடுவார்.
தானம் கொடுப்பது நல்லது ஆனால் ஒரு சில பொருட்களை நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு கொடுக்கும் போது அப்பொருளுடன் நம்முடைய அதிஷ்டமும் மகாலக்ஷ்மியும் நம்மிடமிருந்து அற்றுப்போகும்.
முதலாவது பொருளாக கிழிந்த துணி .
எப்போதும் கிழிந்த துணியை நாங்கள் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக்கூடாது. ஆனால் நிறைய நாளாக பயன்படுத்தியும் கிழியாமல் இருந்தால் இந்த துணியை தானமாக கொடுக்கலாம்.தவறில்லை.
வீட்டில் இருக்கும் உடைந்த பொருட்களையும் தானமாக கொடுக்கிதீர்கள். வீட்டில் கிழந்த துணி , உடைந்த பொருட்கள் இருந்தால் அதை தூக்கி வீசி விடுங்க்ள்.
துடைப்பம்.
இந்த துடைப்பம் மகாலக்ஷ்மி வாசம் செய்கின்ற இடமாக கருதப்படுகிறது. இந்த துடைப்பத்தை நீங்கள் தானமாக கொடுத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் மகாலக்ஷ்மியை தானமாக கொடுத்து போலாகும். மீறியும் இதை தானமாக கொடுத்தால் உங்கள் வீட்டில் பாரிய அளவில் பணக்குறைவு உண்டாகும்.
பழைய உணவுகள்.
பழைய உணவு என்றால் மற்றவர்கள் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் உணவுகளை தாணமாக கொடுக்காதீர்கள்.
கூர்மையான பொருட்களை தானமாக கொடுக்கக் கூடாது. கூர்மையான பொருட்கள் என்றால் கத்தி , ஊசி , கத்தரிக்கோல் போன்ற பொருட்கள் ஆகும்.
நீங்கள் தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்.
முதலாவது அன்னம் . அந்த அன்னத்தை நீங்கள் தானமாக வழங்கினால் உங்கள் வீட்டில் வறுமை இருக்காது.
துணி.
பயன்படுத்திய துணி அல்லாமல் புதிய துணி. இந்த புதிய துணிகளை நீங்கள் தானமாக வழங்கினால் உங்கள் ஆயுள் விருத்தியடையும். நோய் நொடி ஏற்படாது.
தேன்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தேனை தானமாக வழங்கினால் நல்ல அழகான் குழந்தை கிடைக்கும்.
அரிசி.
நம் செய்த பாவங்கள் தீர இதை கொடுங்கள். அடுத்து வீட்டில் சந்தோஷம் நிலைத்து நிற்க பால் தானம் கொடுங்கள்.
தயிர்.
இதை தானமாக கொடுத்தால் தம்பதியினரிடையே ஒற்றுமை நிலைத்திருக்கும். அடுத்து பழ தானம். பழங்களை தானமாக வழங்கினால் உங்கள் அறிவு விருத்தியடையும்.
பசு.
இந்த பசுவை தானமாக கொடுத்தால் அதில் அவர்கள் முன்னேற்றமடைந்தால் அது எமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும்.