உங்கள் வீட்டில் தரித்திரம் உண்டாக இது தான் காரணம். கல்லுப்பை இப்படி பயன் படுத்தினால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும் வீட்டில் குடும்ப பிரச்சினைகளும் உண்டாகும்.
உங்கள் வீட்டில் தரித்திரம் உண்டாக இது தான் காரணம். கல்லுப்பை இப்படி பயன் படுத்தினால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும் வீட்டில் குடும்ப பிரச்சினைகளும் உண்டாகும்.
வீட்டில் கல்லுப்பை பயன்படுத்தும் போது செய்யக்கூடாத சில விடயங்கள்.
பொதுவாகவே கல்லுப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாக விளங்குகின்றது. அந்த மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய உப்பை முறையான விதத்தில் கையாளுவதால் மகாலக்ஷ்மி நமது வீட்டில் நிரந்தரமாக தங்குவார்.
முதலாவது கல்லுப்பை நீங்கள் பிளாஸ்திக் பேணியில் போட்டு வைத்து பயன்படுத்துவதை தவிருங்கள். பீங்கான் ஜாடியில் பேட்டு வைக்கலாம்.
அடுத்து நீங்கள் யாரிடமும் உப்பை உங்கள் கைகளால் கொடுக்க கூடாது. அதை நீங்கள் உங்கள் கைகளால் கொடுப்பதால் உங்கள் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றல்களும் அத்துடன் சேர்ந்து போய் விடும்.
அடுத்து கோலம் போடும் போது உப்பை பயன்படுத்தக்கூடாது. அடுத்து பூஜை அறையில் எப்போதும் கண்ணாடிக்குவளை ஒன்றில் கல்லுப்பு போட்டு வையுங்கள் . பின்னர் அதன் மேல் மஞ்சள், குங்குமத்தை போட்டு வையுங்கள்.
பின்னர் அந்த கண்ணாடி குவளையின் கீழ் தட்டு ஒன்றை வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயமொன்றையும் வையுங்கள். இதை தொடர்ந்து கடைப்பிடித்து வாருங்கள். நல்ல பலனை பெறுவீரகள்.