ஆன்மிகம்

நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கவும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து தரவும் எலுமிச்சம் பழத்தினை வைத்து இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்

நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கவும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து தரவும் எலுமிச்சம் பழத்தினை வைத்து இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்

வெற்றி மேல் வெற்றிகளை குவித்து தரும் பரிகாரம்.

இதை காரியத்தடை உள்ளவர்கள் செய்யலாம். இதை செய்து விட்டு நீங்கள் உங்கள் காரியஙகளை செய்வதால் செல்லும் காரியம் தடையின்றி நடக்கும்.

இதற்கு எலுமிச்சம் பழம் மட்டுப் போதும்.

இந்த எலுமிச்சம் என்பது காயகற்ப மூலிகை எனப்படும். இதற்கு வசீகர சக்தி அதிகமாகவே உண்டு , எதிர் மறை ஆற்றல்களை நீக்கும் சக்தி அதிகமாகவே உண்டு மற்றும் துஷ்ட சக்திகளை அழிக்கும் சக்தி உண்டு.

அதனால் தான் நீண்கள் புதிதாக ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் போது ஒரு கண்ணாடிக்குவறையில் தண்ணீரை ஊற்றி அதனுள் எலுமிச்சம் பழத்தை போட்டு வையுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

மேலும் இந்த பழம் அம்மனுக்கு உரிய பழம். நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது இந்த பழத்தை கையோடு கொண்டு போனால் நீங்கள் செல்லும் காரியம் தடையின்றி நடக்கும்.

அதுமட்டுமல்லாமல் முக்கியமான காரியத்திற்கு போக முன் ஒரு எலுமிச்சம் கனியை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள்.

பின் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள் வாய் போற்றி ஓம் எனற மந்திரத்தை சொல்லுங்கள். இந்த மந்திரத்தை சொல்லும் போது ஆள் மனதுடன் கண்களை மூடிக்கொண்டு ஆறு முறை சொல்லுங்கள்.

பின் அந்த எலுமிச்சம் கனியை உங்களுடன் கொண்டு செல்லுங்கள். இப்படி இதை செய்து உங்களுடன் கொண்டு சென்றால் நீங்கள் செய்யும் காரியம் தடையின்றி நடக்கும். நீங்கள் செல்லும் காரியம் வெற்றியைத்தரும்.

Related Articles

Back to top button