இலங்கை செய்திகள்

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை..!!

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை..!!

நாட்டின் 5 மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கே இவ்வாறு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பல பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகின்றது.இதனால் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button