இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

எரிவாயுவின் தரம் குறித்து தறக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு..

இலங்கையில் தற்போது வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் தரம் குறித்த ஆய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.

அண்மைய நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஏழு மாவட்டங்களில் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட எரிவாயுக்கள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

எரிவாயு கசிவுகள் காரணமாக இவ்வாறு கொள்கலன்கள் வெடித்ததாக குறிப்பிடப்படும் பின்னணியில் இது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டது

எரிவாயுவின் தரம் பற்றி ஆய்வு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு கொள்கலனில் உள்ளடக்கப்படும் வாயுக்கலவையின் விகிதாசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button