காதலர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் விதித்துள்ள தடை..
காதலர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் விதித்துள்ள தடை..
காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி போதைப்பொருள் விருந்து மற்றும் பேஸ்புக் விருந்து நடத்தினால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தில் காதலிப்பதில் எவ்வித தடையும் இல்லை. எனினும் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்து காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி பேஸ்புக் விருந்துகளையும் அன்றையதினம் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் காதலர் தினங்களில் பேஸ்புக் விருந்து மற்றும் போதை பொருள் விருந்துகள் பல சுற்றிவளைக்கப்பட்டன. இதனால் இம்முறை அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இந்த விருந்துகளை சுற்றிவளைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் அதிகமாக இளம் வயதினருக்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது. இதனால் பெற்றோர் தங்கள் மகள் மகன் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரி அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.