இலங்கை செய்திகள்

இலங்கை ஏரிவாயு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இலங்கை ஏரிவாயு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்இத் தகவலை லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 6,000 மெற்றிக் டன் எரிவாயுவை விடுவிப்பதற்கு தேவையான டொலர்கள் இன்று வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயுவை விடுவிப்பதற்காக சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்ட போதிலும், நேற்று பிற்பகல் வரை இலங்கை மத்திய வங்கி எந்தவொரு டொலர்களையும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு எரிவாயுவுடனான கப்பல்கள் தற்போது இலங்கையின் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரத்திற்கமைய நிறுவனத்திடம் 2000 மெற்றிக் டன் எரிவாயு மாத்திரமே உள்ளது. அவசியமான எரிவாயுவை இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கைகளை விடுத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button