இலங்கை செய்திகள்

இலங்கை திருமணப் பதிவு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றம்!

இலங்கை திருமணப் பதிவு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றம்!

வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல்,

திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலுக்கான ஏற்பாடுகள் குறித்த கட்டளைச் சட்டத்தில் உள்வாங்கப்படாமையால், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

மேலும் அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button