இந்திய செய்திகள்

காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்..

காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்..

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ரவியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் விரக்தி அடைந்த சரண்யாவின் உறவினர்கள் ரவிக்குமாரை தாக்கி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்.

இதனால் அவமானம் அடைந்த ரவிக்குமார் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர் மீது ஏறியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து நான்கு மாதமே ஆன இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தில் உடல் சிதைவுகள் இல்லாமல் தலை வேறு உடல் வேறாக கிடந்த ரவிக்குமாரின் சடலத்தை கனத்த இதயத்துடன் தூக்கிக்கொண்டு வந்த ஊழியர்கள் கண்ணீர் வடித்த காட்சி நெஞ்சை உலுக்கும்படியாக இருந்தது.

Related Articles

Back to top button