இலங்கை செய்திகள்

தேங்காய், தேங்காய் எண்ணெயின் விலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

தேங்காய், தேங்காய் எண்ணெயின்
விலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேங்காயின், தேங்காய் எண்ணெயின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல விடைக்கான வினாவை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே, 60 ரூபாய்க்கு காணப்பட்ட தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் இரு வருடக் காலத்திலேயே தேங்காயின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என்றார். இந்நிலையில், தேங்காயின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? எனவும் இதன்போது ஹேசா விதானகே கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, தமிழ் – சிங்கள புத்தாண்டுக்க முன்னர் தேங்காயின் விலை, தேங்காய் எண்ணெயின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Articles

Back to top button