இந்திய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம் – தேடிச் சென்ற பெற்றோருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம் – தேடிச் சென்ற பெற்றோருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!!!

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

இந்த தம்பதிக்கு முகுந்தன், தர்னீஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது மகன் தர்னீஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.

இதனால் சிறுவனை அவரது பெற்றோர் வீட்டிற்கு வெளியே பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் அங்கும் சிறுவன் கிடைக்கவில்லை.

இதையடுத்து வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது சிறுவன் தர்னீஸ் அதில் விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு உடனே சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Articles

Back to top button