“நான் மதம் மாறி விட்டேன்”- நடிகை வனிதா விஜயகுமார் பரபரப்பு தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி..
“நான் மதம் மாறி விட்டேன்”- நடிகை வனிதா விஜயகுமார் பரபரப்பு தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி..
நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் ( Vanitha Vijayakumar) மதம் மாறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.
ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது.
ஏற்கனவே 2 திருமணம், ஒரு காதல் ஆகியவற்றை கடந்து வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஓரிரு மாதங்களிலேயே இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து வனிதா பழையபடி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்
பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சியில் நடுவர் பின் பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த வனிதா, பவர்ஸ்டாருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களால் அவருக்கு நான்காவது திருமணம் நடைபெற்றதா என கிசுகிசுக்கப்பட்டது.
கிசுகிசுக்கள் போதாது என்று, நான்கு என்ன நாற்பது கல்யாணம் கூட பண்ணுவேன் உங்களுக்கு என்ன பிரஸ்மீட்டிலேயே பேசி விவகாரம் ஆக்கினார் வனிதா.
பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு பாதியிலேயே வெளியேறினார்.
சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ஓவராக அலம்பல் செய்த வனிதா, சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மனகசப்பால் பாதியிலேயே வெளியேறினார்.
வெளியே வந்து பிக்பாஸ் அல்டிமேட் பற்றி கழுவி ஊற்றி பேட்டி கொடுத்து, போஸ்ட் போட்டு வந்த வனிதா, திடீரென படு ஸ்லிம்மான போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து சென்ற வனிதா விஜயகுமார் அங்கு கோயில்களுக்கு சென்ற படங்களையும் பகிர்ந்தார்.
நன்றி – Perfect News Post