இந்திய செய்திகள்

25 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை..

25 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை..

25 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை..

துமகூரு, : இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு, மருமகள் தொந்தராவால் தான் தற்கொலை செய்ததாக தாய் குற்றம் சாட்டி உள்ளார்.

துமகூரின் ஹுலியாரு அருகே உள்ள அக்கிமரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா, 45. இவருக்கும், 25 வயதான மோகனா என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 19ல் திருமணம் நடந்தது. மோகனா ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்தவர்.

இந்த திருமணம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அவரது தோட்டத்தில் துாக்கிட்ட நிலையில் சங்கரப்பா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். ஹுலியாரு துர்கா போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

தற்கொலை குறித்து மோகனா கூறியதாவது: நானும், என் கணவரும் நன்றாக இருந்தோம். ஆனால் என் மாமியார் 15 நாளுக்கு ஒரு முறை என்னிடம் சண்டை போட்டு வந்தார்.

அடிக்கடி என்னை வெளியில் போவதாக குற்றம் சாட்டினார்.என் தாய், தந்தையுடனும் பேச அவர் விடவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் எங்களால் குடும்பம் நடத்த முடியாது என கணவர் கூறினார். அதற்கு மாமியார், ‘செத்து போ’ என என் கணவரை திட்டினார்.

இதனால் கோபத்தில் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. காலையில் தான் விஷயம் தெரிய வந்தது. நான் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தாய் ரங்கம்மா கூறுகையில், “நேற்று முன்தினம் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தேன்.

அப்போது என் மருமகள் நாயை அவிழ்த்து விட்டார். நான் பயத்தில் கீழே விழுந்து விட்டேன். “இது சம்பந்தமாக மகனிடம் புகார் கூறினேன்.

என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு மகனிடம் மருமகள் கூறினார். குடும்ப தகராறில்தான் என் மகன் தற்கொலை செய்து கொண்டார்,” என்றார்.

நன்றி – தினமலர்

Related Articles

Back to top button