இலங்கை செய்திகள்

வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்.

வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்.

வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பத்து மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் இறைச்சி, மீன், பால், சீஸ் போன்ற உணவுப்பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் ருவான் விஜேயமுனி தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருட்களை அன்றாடம் கொள்வனவு செய்வது பொருத்தமானது என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பல்பொருள் அங்காடிகளில் மின் பிறப்பாக்கிகள் இயங்கி வருவதனால் அவற்றின் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் பழுதடைய வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மனித பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாத இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடத்தி வருவதாகவும் அவ்வாறு தரம் குறைந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button