க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..
க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..
இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் வழமை போன்று
நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
நடைமுறைப் பரீட்சைகளுக்கு நேரம் கிடைத்துள்ள பரீட்சார்த்திகள் உரிய நேரத்தில் உரிய பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி ஊரடங்குச் சட்டம் காரணமாக நேற்று நடைபெறவிருந்த நடைமுறைப் பரீட்சைகள் நடைபெறவில்லை எனவும், நேற்றைய தினம் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் இன்று பரீட்சை
நிலையங்களுக்கு சென்று திகதி மற்றும் நேரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.