இந்திய செய்திகள்
மின்சாரம் கட்டணம் அதிகரிப்பு.
மின்சாரம் கட்டணம் அதிகரிப்பு.
இந்திய செய்திகள்.
தெலங்கானாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
வீட்டில் பயன்படும் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு உபயோக மின் கட்டணம் 50 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.45 இல் இருந்து ரூ.1.95 ஆக அதிகரித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
51 யூனிட் முதல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.2.60 இல் இருந்து ரூ.3.10 ஆக அதிகரித்துள்ளது.
சலூன் கடைகள் உள்பட சிறு தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரங்களுக்கான மின் கட்டணத்தில் மாற்றமில்லை என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.