இலங்கை செய்திகள்

இலங்கையில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இலங்கையில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இன்றும் நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படும் விபரங்களை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் A தொடக்கம் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3 மணிமுதல்

இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படவுள்ளது.

P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின் தடைப்படவுள்ளது.

CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் A முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்சாரம் தடைப்படவுள்ளது.

CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டினை

நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button