இலங்கை செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு பொலீசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..

புத்தாண்டை முன்னிட்டு பொலீசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..

புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெறும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளருமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்டமிட்ட குழுக்கள், பண்டிகை காலத்தில் இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட தயாராவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த குழு புத்தாண்டு வாழ்த்துடன் பரிசுப் பொதி உள்ளதாக தகவல் வழங்கி, குறித்த பெறுமதியான பரிசில்களை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கிலக்கம் ஒன்றினை கொடுத்து அதற்கு ஒரு தொகை பணம் வைப்பிலிடச் சொல்லி இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button