இலங்கை செய்திகள்

எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது பொலிஸார் விடுத்துள்ள
கடும் எச்சரிக்கை!

உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உன பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் தேவையில்லாமல் எரிபொருளை சேகரித்து அதனை மோசடியாக பயன்படுத்துவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் 68 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 8,025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனுமதியின்றி மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் விற்பனை நிலையங்களை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button