இலங்கை செய்திகள்

புத்தாண்டினை முன்னிட்டு பொது மக்களுக்கு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அறிவித்தல்.

புத்தாண்டினை முன்னிட்டு பொது மக்களுக்கு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அறிவித்தல்.

நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும்மூன்று நாட்களுக்கு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள்ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடைஅமுல்படுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியாலமும்15 நிமிடங்களும் மாத்திரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த திகதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிகளில்இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுமேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகமழை பெய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காசல்றீ, மவுஸ்ஸாகலை, கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் சமனலவெவநீர்த்தெக்க பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் நீர் மின் உற்பத்தியைமேலும் அதிகரிக்க முடியும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

நன்றி – Capital News

Related Articles

Back to top button