இலங்கை செய்திகள்

மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

நாளை (18) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இன்று (17) பிற்பகல் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளாந்த தேவை மற்றும் மின் உற்பத்தியை ஆராய்ந்த பின்னர் மின்வெட்டு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர் மின் நிலையங்களைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மையில் பெய்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கான எரிபொருளை விநியோகிப்பது இன்னமும் தாமதமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் 2 மணித்தியாலம் 15 நிமிடம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி இன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பல வலயங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button