திருமணம் நடைபெற்று 15 நாட்களில் புது மாப்பிள்ளை நேர்ந்த பரிதாபம் – ஊர் மக்கள் சோகத்தில்.
திருமணம் நடைபெற்று 15 நாட்களில் புது மாப்பிள்ளை நேர்ந்த பரிதாபம் – ஊர் மக்கள் சோகத்தில்.
இந்திய திண்டுக்கல் பகுதியில் அனுமந்த பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் பிரபாகரன்னுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஏர்போர்ட் நகர் பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பிரபாகரன் சென்றுள்ளார் என்று போலீசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரபாகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதை தடுக்க வந்த அவரது நண்பர்கள் இருவரையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ் சம்பவம் இடம்பெற்றதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.