இலங்கை செய்திகள்

பேருந்துடன் ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழப்பு.

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மன்னம்பிட்டி பாலத்தின் அருகில் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவமானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முன்னால் பயணித்த பேருந்து ஒன்றை முந்திச் செல்வதற்கு முயற்சித்தபோது எதிரேவந்த மற்றொரு பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 70 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் அவரது 62 வயது மனைவியும் 72 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button