ஆன்மிகம்

வீட்டில் வறுமை, தரித்திரம் நீங்கி செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் -இந்த விஷயங்களை தவறாமல் கடைபிடித்தால் பலன் கிடைக்குமாம். தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் வறுமை, தரித்திரம் நீங்கி செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் -இந்த விஷயங்களை தவறாமல் கடைபிடித்தால் பலன் கிடைக்குமாம்.
தெரிந்து கொள்ளுங்கள்.

கையில் காசு இருந்தாலும், பையில் தங்க வில்லையே என்ற கவலை பலருக்கும் இருந்து கொண்டு தான் வருகின்றது. வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கிறது.

வருமானத்திலிருந்து சிறிதளவு சேர்த்து வைக்கலாம் என்று நினைத்தாலும் கூட பலராலும் முடிவதில்லை. தொடர்ந்து பல கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது.

இதற்கு என்ன தான் காரணம் என்று எவ்வளவு யோசித்தாலும் அதற்கு விடையொன்றும் கிடைப்பதில்லை.

இவ்வாறான நிலைமையைதான் வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்திருஷ்டி, தரித்திரம் என்று சொல்வார்கள்.

உங்கள் தந்திரம் நீங்கி செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி இந்தப் பதிவினுள் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒருவர் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், நல்ல வேலையில் இருந்தாலும் அவர்களை பார்த்து சிலர் இவர்களுக்கென்ன, நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்று பொறாமை படுவதே கண்திருஷ்டியாகும்.

அதேபோல் உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி அமர்ந்து இருந்தாலும் எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அவை கையில் தங்காது.

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் சேர பின்பற்ற வேண்டியவை.

பச்சைக்கற்பூரம், சோம்பு, ஏலக்காய்
இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜித்து வந்தால் வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டின் பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றும் பொழுது இரு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அவ்வாறு செய்வது செல்வத்தை உங்களிடம் ஈர்த்துக் கொடுக்கும்.

மகாலட்சுமியின் வாசம் நிறைந்திருக்கும் லவங்கப்பட்டையின் குச்சியில் பத்து ரூபாய் தாளை சொருகி வைத்து, அதனை உங்கள் பணப் பெட்டியில் வைத்து விடுங்ககள்.

இவ்வாறு செய்வதால் பணத்தை உங்களிடம் ஈர்க்க முடியும்.

நீங்கள் பணம் வைக்கும் பர்ஸில் இரண்டு புதினா இலைகளை எப்பொழுதும் வைத்திருக்க, உங்கள் பர்ஸில் இருக்கும் பணம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.

இதனை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்.

வீட்டில் செய்யக்கூடாத செயல்கள்.

அன்னம், உப்பு, நெய் இவைகளை எப்போதும் கையினால் பரிமாறக் கூடாது. அவ்வாறு செய்வது மாமிசத்தை பரிமாறுவதற்கு சமமாகும்.

இதனால் வீட்டில் தரித்திர நிலை உண்டாகும். இரவு நேரங்களிலும், வீட்டில் பூஜை செய்து முடித்த உடனேவும் வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் லட்சுமி வெளியே சென்று தரித்திர நிலை மட்டுமே நிலைத்திருக்கும்.

அதேபோல் வீட்டை பெருக்கி குப்பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் சேர்த்து வைக்கக் கூடாது. இதுவும் ஒரு வகையான தரித்திர நிலையாகும்.

எவருக்கேனும் பணம் கொடுக்கும் பொழுது வாசற்படிக்கு வெளியே நின்று கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் உங்களின் அதிர்ஷ்டம் மற்றவர்களுக்கு சென்று விடும்.

வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு, பால் போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அவற்றை குறைய விட்டாலும் தரித்திரம் உண்டாகும். இவ்வாறான உங்களின் அன்றாட செயல்களை சரிவர மாற்றிக்கொண்டால் உங்கள் வீட்டில் உள்ள தரித்திர நிலை நீங்கி பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.

Related Articles

Back to top button