ஆன்மிகம்

வீட்டில் பணம் சேர, பணம் பல மடங்காகப் பெருக இந்தப் 10 விஷயங்களை தவறாமல் செய்து வந்தாலே பலன் கிடைக்குமாம்..

வீட்டில் பணம் சேர, பணம் பல மடங்காகப் பெருக இந்தப் 10 விஷயங்களை தவறாமல் செய்து வந்தாலே பலன் கிடைக்குமாம்..

பெரும்பாலும் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஒரு விஷயம், நான் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பத்திற்கு

தேவையான பணம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நமது வேண்டுதல்கள் அனைத்தும் பணத்தை முன் படுத்தி தான் இருக்கிறது.

ஏனென்றால் பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். எந்த ஒரு கவலையும் இல்லாமல் நமது குடும்பத்தை நல்ல வழியில் நடத்திச் செல்ல முடியும்.

அவ்வாறு லட்சுமி கடாட்சம் நிறைந்து, ஐஸ்வர்யம் நிலைத்திருந்தால் மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் பணம் பெருகிக்கொண்டே இருக்கும்.

பணம் வீன் விரையம் ஆகமல் இருக்க நமது வீட்டில் சில முக்கிய விஷயங்களை சரியாக பின்பற்றி வந்தால் இந்த பண விரயம் குறைந்து, கைக்கு வரும் பணம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே இருக்கும்.

வாருங்கள் ஐஸ்வர்யத்தை அதிகரிக்கும் பத்து விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு வீட்டிலும் இல்லை என்று இல்லாமல் அனைத்து பொருட்களும் நிறைவாக இருக்க வேண்டும்.

அப்படி அரிசி அளக்கும் படி அனைவரது வீட்டிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்ததாக தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார வணங்க வேண்டும்.

ஒரு சில பெண்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து குப்பைகளை மூலையில் சேர்த்து வைப்பார்கள். இது போன்ற காரியங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

எப்பொழுதும் காலை கண்விழித்ததும் முதலில் பின்பக்க வாசலைத் திறந்த பிறகு தான் வீட்டின் முன்புற வாசலை திறக்க வேண்டும்.

வீட்டில் இரு வாசல் இல்லாமல் ஒரே ஒரு வாசல் மட்டும் தான் இருக்கிறது என்றால் முதலில் ஜன்னல் கதவை திறந்து, அதன் பிறகு முன் வாசலை திறந்து, மகாலட்சுமியே வருக! வருக! என்று கூறிக் கொண்டே கதவை திறக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை பூஜை செய்வதற்கு வியாழக்கிழமை பூஜை பாத்திரங்கள் பூஜை படங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து வைத்துவிட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்

மற்றவருக்கு பணம் கொடுக்கல், வாங்கல் இதுபோன்ற பணம் சம்பந்தமான விஷயங்களை செவ்வாய், வெள்ளிக்கிழமை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

மற்றவருக்கு இந்த கிழமைகளில் பணம் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதேபோல் வீட்டில் வைக்கும் பணப்பெட்டி தேக்கு மரத்தினால் செய்தது என்றால் பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.

அதேபோல் பணம் வைக்கும் டப்பாவில் மீது வாசனை திரவியத்தை தினமும் தெளித்து வர வேண்டும்.

அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு பன்னீர் அதில் சிறிதளவு பச்சை கற்பூரம், 2 ஏலக்காய் இவற்றை சேர்த்து வைத்து, அதனை பூஜை அறையில் வைத்து

, பூஜை செய்து, அதன் பின்னர் அந்த தண்ணீரை பணப் பெட்டியின் மீது தினமும் தெளித்து வர வேண்டும்.

இது போன்ற விஷயங்களை தவறாமல் செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் எந்தவித தடையுமில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

நன்றி – தெய்வீகம்.

Related Articles

Back to top button