இலங்கைக்கு ஒரு துளி கூட கிடைக்காது.. வெளியாகியுள்ள அதிர்ச்சி அறிவிப்பு.
இலங்கைக்கு ஒரு துளி கூட கிடைக்காது.. வெளியாகியுள்ள அதிர்ச்சி அறிவிப்பு.
எதிர்காலத்தில் இலங்கையின் கடன் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஒரு துளி எரிபொருளை கூட இலங்கைக்கு
கொண்டு வரப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதே தவிர, அரசியல் நெருக்கடியல்ல எனவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு அனைவரும் தேசிய ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் எஞ்சியிருக்கும் டொலர்களை எரிபொருள் தாங்கி போன்று பதிவிறக்கம் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்