மின் தடை காலம் அதிகரிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.
மின் தடை காலம் அதிகரிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளந்தமையினால் மின்தடை அமுலாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் , மின்தடை அமுலாகும் காலப்பகுதியினை 5 மணித்தியாலங்களுக்கு நீடிக்க வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமெனஇலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, A முதல் w வரையான வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை5 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படஉள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதிகளில் 3 மணித்தியாலயங்கள் மின்விநியோகத் தடை ஏற்படுத்தப்படும் எனஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.