இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தை உலுக்கும் ஆன்லைன் கேம் – சுன்னாகத்தில் குடும்ப தலைவர் உயிரிழப்பு. யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் கேமினால் 2வது நபர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தை உலுக்கும் ஆன்லைன் கேம் – சுன்னாகத்தில் குடும்ப தலைவர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் கேமினால் 2வது நபர் உயிரிழப்பு.
கைபேசியில் “பப்ஜி” விளையாட்டில் தொடர்ச்சியாக மூழ்கியிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் கைபேசி இணைய விளையாட்டில் மூழ்கியிருந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்.
எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார் என்றும், அவருக்கு வேறு பிரச்சினைகள் எவையும் இருக்கவில்லை என்றும் உயிரிழந்தவரின் மனைவி தெரித்துள்ளார்.