இலங்கை செய்திகள்

10 மணித்தியால மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

10 மணித்தியால மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

மின்விநியோகத்தடையை 10 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

எதிவரும் வாரம் முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, மின்விநியோகத்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் 10 மணித்தியால மின்விநியோகத்தடை தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button