ஆன்மிகம்

M , N , P , R , S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா? உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்…!

N என்று எழுத்தில் ஆரம்பிம்பிக்கின்றதா உங்கள் பெயர் அப்ப இத முழுமையான படியுங்கள்.

நீங்கள் கடின உழைப்பாளிகள்.

உங்கள் வாழ்க்கையில் தேவையான எதுவொன்றையும் உழைப்பின் மூலம் பெற நினைப்பீர்கள்.

உங்களுடைய வேலையில் தடைகள் ஏற்பட்டாலும் முயற்சியைக் கைவிட மாட்டீர்கள். வெற்றி கிடைப்பதும் உங்களுக்கு சுலபமல்ல.

கடும் போராட்டம் இருக்கும். ஆனால் விடா முயற்சியுடனும் போராடும் குணத்துடனும் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் சில சிக்கல்கள் அவ்வப்போது தோன்றும்.

உங்களுடைய அனுபவத்தையும் நம்பிக்கையான மனிதர்களின் நட்புகளால் மட்டுமே அவற்றை தீர்க்க முயற்சிப்பீர்கள்.

நீங்கள் காதல் போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு உடையவர்கள் அல்ல.

ஆனால் நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள்.

நல்லியல்புகளும் நற்பண்புகளும் கைவரப் பெற்ற நீங்கள் எதைவிடவும் பெரிதாக நினைப்பது ஒழுக்கம் ஒன்றை மட்டுமே

P என்று எழுத்தில் ஆரம்பிம்பிக்கின்றதா உங்கள் பெயர் அப்ப இத முழுமையான படியுங்கள்.

நீங்கள் அமைதியானவர்கள். உங்களுடைய எண்ணங்கள் எப்போதும் உயர்ந்தவை.

மற்றவர்களுடன் வளவளவென்று பேசுவது உங்களுக்குப் பிடிக்காது.

என்ன தேவையோ அதை மட்டுமே பேசுவீர்கள். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கும் இயல்புடையவர்கள் நீங்கள்.

உங்களுக்கு ஆசை அதிகம் இருக்கும். ஆனால் லட்சிய வேகம் மிகவும் குறைவு. சுகவாசியாக இருப்பதால் சில சமயம் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள்.காதல் போன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவர்கள் நீங்கள்.

உங்களை நம்பியவர்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபாடு உடையர்கள் நீங்கள்.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் அன்புள்ளம் கொண்டவர்கள் நீங்கள்.

R என்று எழுத்தில் ஆரம்பிம்பிக்கின்றதா உங்கள் பெயர் அப்ப இத முழுமையான படியுங்கள்.

ஆர் என்ற எழுத்தில் உங்கள் பெயர் உள்ளதென்றால் நீங்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள்.

எந்தவொரு விஷயத்தையும் மிகவும் நுட்பமாகவும் ஆழமாக அணுகி புரிந்து கொள்வீர்கள். இந்த குணத்தால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியாக இருக்கும்.

உங்களுடைய இயல்புக்காகவும் குணத்துக்காகவும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

உங்களுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்களை நீங்கள்தான் வழி நடத்துவீர்கள். பலருடைய சுக துக்கங்கள் உங்களைச் சார்ந்திருக்கும்.

உங்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள். காரணம், நீங்களும் யாரையும் ஏமாற்ற மாட்டீர்கள். உங்களுக்குப் பிடிக்காத வேலையை செய்யவே மாட்டீர்கள்.

ஈடுபாட்டுடனும் முழு மனத்துடனும் செய்ய முடிந்தால் மட்டுமே அந்த வேலையில் தீவிரமாக இறங்குவீர்கள்.

அதனால்தான் வெற்றி உங்களின் பக்கம் விரைவில் வந்துவிடுகிறது.

M என்று எழுத்தில் ஆரம்பிம்பிக்கின்றதா உங்கள் பெயர் அப்ப இத முழுமையான படியுங்கள்.

நீங்கள் சுயம் சார்ந்த சிந்தனைகள் அதிகம் உடையவர்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்களே பல விஷயங்களைக் கற்று உணர்ந்து அதன்படி செயல்படுவீர்கள்.

மற்றவர்களின் உதவி எதனையும் எதிர்ப்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

தவறான செயல்களில் ஒருபோதும் ஈடுபடவே மாட்டீர்கள். மற்றவர்களின் தவறுகளையும் பொறுக்க மாட்டீர்கள்.

முன்கோபம் அதிகம் உள்ள உங்களுக்கு அந்தக் கோபம் வந்த வேகத்தில் தணிந்துவிடும்.

உங்களுக்கு ஆடம்பரமாக இருப்பது பிடிக்காது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் இயல்புடைவர்களை நெருங்க விட மாட்டீர்கள்.

பொதுவாகவே உங்களை அணுகுவது கடினம். காரணம் உங்களின் வெளிப்படையான பேச்சு.

மனதில் உள்ளவற்றை ஒளிக்காமல் சுருக்கென்று பேசும் இயல்புடையவர்கள் நீங்கள்.

எளிமையான வாழ்க்கை, தனிமையான சூழ்நிலை இவையே உங்களின் விருப்பத் தேர்வு.

உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக துணை நிற்கும். வாழ்க்கையில் வேகமாக வெற்றி பெறுவீர்கள்.

நினைத்தது யாவும் நடக்கும் ஆனால் உங்களுக்கு எதிரிகளின் தொல்லை அதிகம் இருக்கும். பகைவர்களை நண்பர்களாக்கும் பக்குவமும் உங்களுக்கு உண்டு.

S என்று எழுத்தில் ஆரம்பிம்பிக்கின்றதா உங்கள் பெயர் அப்ப இத முழுமையான படியுங்கள்.

ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.

தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளாகட்டும், அனைவரிடமும் உண்மையாக இருப்பர்.

உணர்வுகளை மறைப்பார்கள்:இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள், தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.

இதனாலேயே இவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.

மிகவும் கவர்ச்சிகரமான வர்கள் இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக அதிகம் சந்தோஷமும் கொள்வார்கள், துன்பமும் கொள்வார்கள்.

இவர்களது கவர்ச்சிகர மான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.

நம்பத் தகுந்தவர்:இவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பத் தகுந்தவர்கள்.

இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சி வசப்படுவார்கள்.

சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும்.

இரக்கமுடையவர்:‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர் களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர்.

இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.

விசுவாசமானவர்கள்:இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர்.

இத்தகையவர்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது.

வார்த்தைகளால் அன்பை வெளிக் காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர்.வெற்றிகரமான தொழில்:இத்தகையவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதி யாகவோ இருப்பர்.

Related Articles

Back to top button