ஆன்மிகம்

குபேரரை இந்த திசையில் வைத்து இப்படி வழிபட்டால் போதும் அவருடைய மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

குபேரரை இந்த திசையில் வைத்து இப்படி வழிபட்டால் போதும்
அவருடைய மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக நாம் பல பரிகாரங்கள், பூஜைகள் செய்கிறோம். வீட்டிலும் பல மாற்றங்களை செய்கிறோம்.

இதற்காக சுவாமி சிலைகள், படங்களை பல இடங்களில் வைக்கிறோம். ஆனால் எந்த தெய்வத்தின் சிலை அல்லது படத்தை, எந்த இடத்தில் வைத்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

பிரச்சனைகள் தீர பரிகாரம் செய்யும் போது, அதை சரியான முறையில் செய்கிறோமா என்பது மிக முக்கியம்

பணம் வருவதில்லை என்று புலம்புபவர்களை விட, சம்பாதித்த பணம் வீட்டில் தங்குவதே கிடையாது. எப்படி செலவாகிறது.

பணம் எங்கு போகிறது என்பதே தெரியவில்லை என வருத்தப்படுபவர்கள் தான் அதிகம்.

இப்படிப்பட்டவர் பணத்தை ஈர்க்கும் சில எளிய பரிகாரங்கள் அல்லது மாற்றங்களை வீட்டில் செய்தாலோ போதுமானது ஆகும்.

​பணத்தை ஈர்க்க பரிகாரம்..

பணத் தேவை என்பது அனைவருக்கும் உண்டு. அந்த பணத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக தான் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் பணம் மேலும், மேலும் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அதோடு பணத்தை ஈர்ப்பதற்காக விரதங்கள், பூஜைகள், பரிகாரங்கள், மந்திரங்கள், ஸ்லோகங்களை சொல்லுகிறோம்.

அப்படியும் வீட்டில் பணம் வருகிறதா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.

வீட்டில் வைக்க வேண்டிய சுவாமி சிலை :

பணம் சேர வேண்டும் என்பதற்காக வீட்டில் சில வாஸ்து பரிகாரங்களும் செய்கிறோம்.

அதோடு சேர்த்து ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் படம் அல்ல சிலையை வாங்கி, வீட்டில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் வைக்க வேண்டும்.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என நாம் பரிகாரமாக ஒரு பொருளை வீட்டில் வாங்கி வைக்கிறோம் என்றால் அதை வீட்டில் எந்த திசை நோக்கி, எந்த இடத்தில் வைக்கிறோம் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

அப்படி பணத்தை ஈர்ப்பதற்காக பலரின் வீடுகளில் குபேர சிலையை வாங்கி வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

பெரும்பாலும் குபேர சிலை வீட்டின் நுழைவு வாயில், பூஜை அறையில் இருப்பதை காண முடியும். செல்வத்திற்கு அதிபதியான குபேரரின் சிலையை நாம் வீட்டில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் இந்த சிலையை எங்கு, எப்படி வைக்கிறோம், அதுவும் குபேரனின் பலவிதமான ரூபங்களில் எந்த ரூப சிலையை வாங்கி, எந்த இடத்தில் வைக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

குபேரர் சிலை வைக்கும் திசை :

குபேரன் சிலையை யார் வேண்டுமானாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். வீட்டில் பணம் சேர வேண்டும் என்பவர்கள், தொழில் செய்யும் இடங்களில் குபேரன் சிலையை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

குபேரர் சிலை வாங்கும் போது தோளில் பண மூட்டையும், முகம் முழுவதும் சிரிப்புடன் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையை வாங்கி வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்து, குபேரர் தென் மேற்கு திசையை பார்த்தபடி இருப்பது போல் வைக்க வேண்டும்.

இந்த திசையில் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டின் ஹால், வீட்டிற்கு வருபவர்கள் கண்களில் படும் வகையில் வைக்கலாம்.

குபேரர் சிலை வீட்டின் வாசலை பார்த்து இருப்பது போல் வைப்பது இன்னும் சிறப்பானதாகும். இதனால் மகாலட்சுமியின் கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும்.

குபேரர் சிலை :

நின்று கொண்டிருப்பது போன்ற குபேரர் சிலையை பண பரிவர்த்தனை நடக்கும் இடங்களில் வாங்கி வைக்கலாம்.

தொழில் செய்யும் இடங்கள், பணப்புழக்கம் அதிகம் உள்ள இடங்களில் இதை வாங்கி வைக்கலாம்.

இதனால் தொழில் ரீதியாக நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் பணம் மீண்டும் விரைவில் நம்மிடமே வருவதற்கான வாய்ப்பு உருவாகும். நிறைய வருமானமும் வரும் என்று அர்த்தம்.

பணம் வந்து கொண்டே இருக்க :

கைகளை மேலே தூக்கியபடி இருக்கும் குபேரர் சிலையை வாங்கி வீட்டின் சமையலறையில் வைப்பது மிகவும் நல்லது.

மிக சக்தி வாய்ந்த பரிகாரமான இதை செய்வதன் மூலம் வீட்டில் தானியங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும்.

குபேரனுடைய சிலைகளை வீட்டில் எந்த அறையில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் குபேரன் சிலையின் வடிவம், அது வைக்கும் திசையை தேர்வு செய்து போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே குபேரன் சிலையை வாங்கி வைப்பதன் உண்மையான பலனை நாம் அனுபவிக்க முடியும்.

இந்த பதிவு tamil.samayam எனும் இணையதத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த பதிவினை நீக்குவது எனின் எமது fmthadam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில்தெரிய படுத்துங்கள்.

Related Articles

Back to top button