இலங்கை செய்திகள்

எரிவாயு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு.

எரிவாயு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு.

இன்றைய தினம் எரிவாயு அடங்கிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் வேளையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள குறித்த எரிவாயு கப்பலில் இருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

19 ஆம் திகதி எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான உலக வங்கியின் நிதி உதவி எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த நிதியுதவி கிடைக்கப்பெற்ற பின்னர் 3 மாதங்களுக்கு நாட்டுக்கு தேவையான எரிவாயு கையிருப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button