இலங்கை செய்திகள்
கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
பேக்கரி தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.