இலங்கை செய்திகள்

இன்றைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்றைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்றையதினம் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் 3 மணி நேரம் மின்வெட்டு முற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று 40 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும், இரவு நேரத்தில் ஒரு மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் CC வலயத்தில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரை 2 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button