ஆன்மிகம்

குபேரரின் பொம்மையை இந்த திசையில் வைத்தால் அவருடைய மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

குபேர பொம்மையை மறந்தும் இந்த திசையில் வைத்து விடாதீர்கள்.
உடனே திசையை மாற்றுங்கள். இல்லை என்றால் உங்கள் வீட்டில் வறுமை மேல் வறுமை ஏற்படும்.

வீட்டில் நாம் வைத்திருக்கும் அழகழகான பொம்மைகளுள் குபேர பொம்மையும் அடங்கும்.

பொதுவாக பூஜை அறையில் குபேர பொம்மையை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். ஒருசிலர் அழகுக்காக வீட்டில் வைப்பதும் உண்டு. புத்த மதத்தை சேர்ந்தவர்கள் குபேர பொம்மையை வாங்கி வழிபடுவதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் குபேர பொம்மையை பொதுவாக வீட்டில் எந்த திசையை நோக்கி வைத்து வணங்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சிவனை வட திசை நோக்கி வழிபட்டவர் குபேரர். மேலும் வெங்கடேச பெருமாளுக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்ற நம்பிக்கை நம்பிக்கையும் உண்டு.

இப்படிப்பட்ட குபேரரை நம் வீட்டில் வடகிழக்கு திசையில் வைத்து வணங்கினால் மிகவும் சிறந்தது என்பது ஐதீகம்.

அவ்வாறு செய்தால் வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷம் நிலவும். செல்வம் அதிகரிக்கும். மேலும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

குபேரரை பார்க்கும்போது எப்போதும் ஒரு விதமான சிரிப்பு நம் மனதிற்குள் இருந்துக்கொண்டே இருக்குமாம்.

மேலும் குடும்பத்தில் எப்போதும் மகழ்ச்சி நிலவும். மன அழுத்தம் குறையும்.. சந்தோஷமான வாழ்க்கைக்கு வாழ வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பது ஐதீகம்

Source from From this article

Related Articles

Back to top button