வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா? அப்ப நீங்க இந்த 5 பொருள்ட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் உங்களை தேடி வரும்.
வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா? அப்ப நீங்க இந்த 5 பொருள்ட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் உங்களை தேடி வரும்.
கையிலே வாங்கினேன்… பையிலே போடல… காசு போன இடம் தெரியலை என்று சிலர் வேதனையோடு பாடுவார்கள்.
சம்பளப்பணம் வாங்கிய நிமிடத்திலே ஏராளமான செலவுகள் வரிசை கட்டி நிற்கும். சில நாட்களிலேயே பணம் செலவாகி விடுவதால் அன்றாட செலவுகளுக்கு சிலர் அல்லல் பட வேண்டியிருக்கும்.
பணத்தை ஈர்க்கவும், வீட்டில் செல்வத்தையும் பணத்தையும் தக்கவைக்கவும் சில சூட்சும ரகசியங்கள் உள்ளன.
நம் வீட்டு அடுப்பங்கரை அஞ்சறைப்பெட்டியில் உள்ள அந்த பொருட்களே பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தவை.
நம்முடைய வீடு வாசனையாக இருக்க வேண்டும். நறுமணம் கமழும் வீடுகளில் அன்னை லட்சுமி குடியேறுவாள்.
எனவேதான் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு சாமி கும்பிடுவார்கள் இல்லத்தரசிகள்.
அடுப்பங்கங்கரையில் உள்ள நறுமணம் மிகுந்த பொருட்கள் சில உள்ளன.
அந்த பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சோதனை முயற்சியாக செய்து பாருங்கள்.
பணத்தை ஈர்க்கும் சக்தியையும் தக்க வைக்கும் சக்தியையும் கண் கூடாக காண்பீர்கள். வீண் விரைய செலவுகள் தடுக்கப்பட்டு அவை சுப விரைய செலவாக மாறும்.
கல் உப்பு ரகசியம்
நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது, அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு, அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
நம்முடைய வீட்டில் பண வரவு அதிகரிக்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை உள்ள நேரங்களில் கல் உப்பு வாங்கலாம்.
வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வர பண வரவு அதிகரிக்கும்.
இது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதால்தான் இன்றைக்கும் பலரது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்லும் போது கல் உப்பு மஞ்சள் வாங்கிச் செல்கின்றனர்.
மகிமை தரும் கிராம்பு
நாம் அன்றாட சமையலுக்க பயன்படுத்தப்படும் கிராம்பு,ஏலக்காய் போன்றவைகளுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.
மஞ்சள் துணியில் சிறிதளவு பச்சைக்கற்பூரம் 3 துண்டுகள், 3 கிராம்பு, 3 ஏலக்காய் சேர்த்து அதை சிறிய முடிச்சாக மஞ்சள் நூலில் கட்டி வைக்கவும்.
வியாபார ஸ்தலங்களில் கல்லா பெட்டியில் வைக்க வேண்டும். வீட்டில் பணம் வைக்கும் பீரோவில் வைக்கலாம்.
நகை பெட்டியில் வைக்கலாம் நகை அடகுபோகாமல் வீட்டிலேயே தங்கும்.
நீங்கள் சம்பளம் வாங்கி வந்தவுடன் அந்த பணத்தை எங்கு வைப்பீர்களோ! அந்த இடத்தில் வைக்கலாம்.
நேர்மறை சக்தியை அதிகரிக்கும் ஏலக்காய்
பொதுவாகவே ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சகமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை அழித்து நேர்மறை சக்திகளை ஈர்க்கின்ற மகிமை வாய்ந்த சக்தி இருக்கிறது.
மூன்று ஏலக்காயை தினமும் விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்து வந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.
பண வரவு சரளமாக இருக்கும்
பணத்தை சேர்க்கும் பெட்டி, உண்டியல், அஞ்சறைப்பெட்டி, மணி பர்ஸ், ஹேண்ட் பேக் என்று எங்கு வேண்டுமானாலும் ஏலக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூரம் முடிச்சை வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் இதை செய்த 48 நாட்களுக்குள் நல்ல ஒரு பண வரவு உண்டாவதையும், கையில் இருக்கும் பணம் தங்குவதையும் நீங்களே காணலாம்.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை என்பதால் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
வெந்தயம் மகிமை
வெந்தயம் சிறுதளவு கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுப்பங்கரையில் ஈசான்யா மூலையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது.
வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும். அஞ்சறைப்பெட்டியில் வெந்தையம் வைக்கும் கிண்ணத்தை பணத்தை வைத்தால் பண வரவு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
பணத்தை அதிகரிக்கும் லவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை சுற்றி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும்.
இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும். புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும்.
மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.
பண வரவு அதிகரிக்கும்
நம்முடைய வீட்டில் எப்போதுமே நல்ல சொற்களையே அதிகம் பேச வேண்டும்.
அசுப சொற்களை அதிகம் பயன்படுத்தினால் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
தேவையற்ற மருத்துவ செலவுகள்தான் அதிகரிக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பணத்தை ஈர்க்கும் பரிகாரங்களை செய்வதோடு நம்முடைய நேர்மறை எண்ணங்களையும் அதிகரிக்க வேண்டும்.
நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் அதிகரித்தாலே செல்வ வளம் பெருகும். விரைய செலவுகள் குறைந்து சுப செலவுகள் அதிகரிக்கும்.