ஆன்மிகம்

வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா? நீங்க இந்த பொருட்ளை மட்டும் வெள்ளை துணியில் கட்டி இந்த இடத்தில் வைத்தால் போதும் குபேரரின் மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா? நீங்க இந்த பொருட்ளை மட்டும் வெள்ளை துணியில் கட்டி இந்த இடத்தில் வைத்தால் போதும் குபேரரின் மனம் குளிரும். பிறகு நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் வகையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

பணம் அதிக அளவில் வந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. நம்முடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்ற பணம் ஒன்று மட்டுமே முக்கியமானது.

இந்த பணத்தை அதிகளவில் சம்பாதிப்பதற்காக நாம் தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

ஏதாவது ஒரு விஷயத்தை செய்து, வேலைக்கு சென்று, தொழில் செய்து எப்படியாவது அதிக அளவில் பணம் சம்பாதித்து நம்முடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் சந்தோஷமாக சுகபோகமாக வாழவேண்டும் என நினைக்கிறோம்.

ஆனால் பல நேரங்களில் இது நடப்பதில்லை. நாம் நினைத்த அளவிற்கு பணம் நம்மிடம் வந்து சேர்வதில்லை.

ஆனால் இந்த பணத்தை மிக அதிக அளவில் கொண்டு சேர்க்கும் ஒரு அற்புதமான எளிய வழிமுறை ஒன்றும் உள்ளது.

இந்த எளிய வழிமுறையை நீங்கள் நம்பிக்கையோடு செய்து வரும்பொழுது நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.இதைப் பற்றி பார்க்கலாம்.

இதை நீங்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். உங்களுடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் இதை செய்தால் போதும்.

இந்த விஷயத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். சுத்தமான வெண்மையான ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் 600 கிராம் வெள்ளை சர்க்கரையை வாங்க வேண்டும்.

கண்டிப்பாக உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய சர்க்கரையை எடுக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமை மட்டுமே இதை வாங்க வேண்டும். அதுவும் சரியாக 600 கிராம் சர்க்கரை இருக்க வேண்டும்.

சரியான அளவில் அளந்து கடையிலிருந்து வாங்கி வர வண்டும். இந்த சர்க்கரையை அப்படியே வெள்ளை துணி மீது கொட்டி விடுங்கள்.

அதன் பிறகு ஒரு ஐந்து ரூபாய் காயின் மற்றும் ஒரு ரூபாய் காயின் மொத்தம் இந்த ஆறு ரூபாயை வெள்ளை சர்க்கரை மீது வைத்து அந்தத் துணியை முடிச்சாக கட்டி விடுங்கள்.

சிறிதளவு கூட சர்க்கரை அதிலிருந்து வெளியே சிந்த. கவனமாக பார்த்து சர்க்கரை கீழே சிந்தாமல் துணியை நன்றாக கட்டி விடுங்கள்.

இதை நீங்கள் 6 மணிக்கு முன்னால் செய்ய வேண்டும். இதைக் கொண்டுபோய் சுவாமி மடத்தில் வைக்க வேண்டும்.

அதன் பிறகு இதற்கு தூப தீபம் காட்டி நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.

இந்த நேரத்தில் நீங்கள் மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் ஒரு மாதத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்கள் மனதில் எல்லாவித சகல சௌபாக்கியங்களும் எனக்கு கிடைக்க வேண்டும்.

கிரக தோஷங்கள் அனைத்தும் விலக வேண்டும். சுக்கிரன் ரீதியாக ஏதாவது பாதிப்புகள் இருந்தால் அதெல்லாம் விலக வேண்டும் என மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி வேண்டுதல் செய்த பிறகு 15 நாள்கள் அதை அப்படியே விட்டுவிடுங்கள்.

இந்த நேரத்தில் எறும்புகள் மொய்க்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள. பதினைந்து நாள் கழித்து வரக்கூடிய செவ்வாய்க் கிழமை, சனிக்கிழமை, புதன்கிழமைகளில் இந்த துணிப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை, திங்கள் கிழமை, வெள்ளிக்கிழமை ,வியாழக்கிழமைகளில் இதை செய்யக்கூடாது.

சாயங்கால நேரத்தில் நவ கிரகங்கள் இருக்கக் கூடிய கோவிலுக்கு இந்த துணிப் பொட்டலத்தை எடுத்து செல்ல வேண்டும். முதலில் சென்று விநாயகரை வழிபடுங்கள்.

அதன்பிறகு நவக்கிரக சந்நிதிக்கு வாருங்கள். துணிப் பொட்டலத்தை கையில் வைத்துக்கொண்டு நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வாருங்கள்.

இந்த நேரத்தில் ஓம் சுக்ராய நமஹ என சொல்லிக் கொண்டே சுற்றி வாருங்கள்.

ஒன்பது முறை சுற்றிய பிறகு சுக்கிரன் இருக்கும் இடத்தில் அவருக்கு முன்பாக இந்த துணிப் பொட்டலத்தை வைத்து விடுங்கள்.

அதன்பிறகு நேராகச் சென்று விநாயகரை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடலாம்.

தொடர்ந்து நம்பிக்கையோடு இந்த விஷயத்தை நீங்கள் செய்து வரும் பொழுது நிச்சயமாக பணம் செல்வம் எல்லாம் உங்களிடம் வந்து சேரும்.

நன்றி, ZIO TAMIL

Related Articles

Back to top button