கல்வி

இவ்வளவு நாள் இதுதெரியம இருந்திருக்கமே!! பல்லிகளை விரட்ட 8 வழிகள்

இவ்வளவு நாள் இதுதெரியம இருந்திருக்கமே!! பல்லிகளை விரட்ட 8 வழிகள்

சில வீடுகளில் எப்போதுமே பல்லி தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும். சுவற்றில் எப்போதுமே பல்லிகள் பர,பரத்துக் கொண்டே இருக்கும். இதைப் பார்த்தாலே நம்மையும் இது முகம் சுழிக்க வைக்கும். இந்த பல்லிகளை இயற்கையான முறையில் நம் வீட்டுக்குள்ளேயே வரவிடாமல் ஓடச் செய்ய ஒரு வழி இருக்கிறது. அதுவும் அதை இயற்கையான முறையிலேயே தயாரிக்கலாம்.

முதலில் நான்கு வெள்ளப்பூண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக உரிக்க வேண்டும். உரித்த பின்பு அந்த வெள்ளப்பூண்டையும், நாம் தனியாக உரித்து வைத்திருக்கும் தோலையும் சேர்த்தே மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இப்போது இதனோடு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டப்பட்ட பாதி பெரிய வெங்காயத்தையும் சேர்த்து போட்டு மீண்டும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

தொடர்ந்து வானொலியில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் நன்கு சூடானது நாம் அரைத்து வைத்திருக்கும் வெள்ளப்பூண்டு, வெங்காயம் கலவையை சேர்க்க வேண்டும். இதனோடு நாம் கொஞ்சம் பொடி செய்த குறுமிளகையும் சேர்க்க வேண்டும். இதனோடு ஏழு கற்பூரவள்ளி இலையையும் போட வேண்டும். இப்போது இரண்டு கப் தண்ணீர், ஒரு கப்பாக சுண்டும் அளவுக்கு கொதிக்கவிட வேண்டும்.

நன்கு கொதித்து வந்தவுடன் இந்த கலவையை வடிகட்ட வேண்டும். இதை நன்கு ஆறவைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த கலவையை ஸ்பிரே பாட்டில் ஒன்றில் ஊற்றி, அதை ப்ரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். இது இரண்டு மணிநேரம் நன்கு குளிர்ச்சியானதும் எடுத்து பயன்படுத்தலாம். இதை பல்லி இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்து பாருங்கள். இந்த ஸ்பிரே பல்லி மீது பட்டால் மயங்கி விழுந்துவிடும். இந்த கலவையால் சுவற்றிலும் கரை படாது. ஆகையால் அந்த கவலையும் தேவையில்லை.

 

இதேபோல் இன்னொரு டிப்ஸ் இருக்கிறது. கடைகளில் கிடைக்கும் கெமிக்கலைவிட இயற்கை பொருளே மிகச்சிறந்தது. இதோ அதற்கான டிப்ஸ். முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை மேலும், கீழும் கட் செய்து சிறிது, சிறிதாக கட் செய்ய வேண்டும்.

தொடர்ந்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்டின் சாறை எடுத்துகொள்ள வேண்டும். இதை வடிகட்டி மூலம் வடிகட்டி எடுக்கவேண்டும். வெங்காயத்தில் அதிகளவு சல்பர் இருக்கும். அதனால் சல்பரில் இருந்து வரும் துர்நாற்றம் பல்லிக்கு பிடிக்காது. அதனால் பல்லி ஓடிவிடும்.

பத்து மிளகு, நான்கு கிராம்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் காரத்தன்மையும், வாசனையும் பல்லிக்கு மயக்கத்தை உருவாக்கும்.

ஒருடம்ளர் தண்ணீரில் இந்த மிளகு, கிராம்பைப் போட்டு அதனோடு நான்கு சிறு துண்டு டெட்டால் சோப்பையும் போட்டுக்கொள்ள வேண்டும். நாம் சாறு எடுத்து வைத்திருக்கும் வெங்காய சாறையும் இதில் சேர்க்கவேண்டும்.

சோப்பு நன்கு கரையும் வரை இதை மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது இதை ஸ்பிரே பாட்டிலில் போட்டு பல்லியின் மீது அடித்தால் நம் வீட்டுப்பக்கமே பல்லி வராது.

இதேபோல் நாம் வீட்டில் முட்டை பயன்படுத்தியதும் அதன் ஓட்டை எடுத்து பல்லி அடிக்கடி வரும்பகுதியில் போடவேண்டும். அதன் வாடை பல்லிக்கு பிடிக்காது என்பதால் அது வீட்டுப்பக்கமே வராமல் ஓடிவிடும்.

 

Related Articles

Back to top button