மணி பிளாண்ட் செடியை வீட்டில் இப்படி வளர்த்தால் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்கள் வீடு தேடி வரும்…
மணி பிளாண்ட் செடியை வீட்டில் இப்படி வளர்த்தால் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்கள் வீடு தேடி வரும்...
மணி பிளாண்ட் செடியை வீட்டில் இப்படி வளர்த்தால் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்கள் வீடு தேடி வரும்…
நமது வீடுகளுக்குள் நல்ல அதிா்வுகளை ஏற்படுத்த, நோ்மறையான சக்தியை ஏற்படுத்த நாம் பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறோம்.
அவற்றில் ஒன்று வீடுகளுக்குள் மணி பிளான்ட் என்ற தாவரத்தை வளா்ப்பது ஆகும். வீட்டில் மணி பிளான்ட் வளா்த்தால், செல்வமும், அதிா்ஷ்டமும் அதிகாிக்கும் என்று இந்திய மக்களின் மத்தியில் ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது
இந்த நிலையில், மணி பிளான்ட் தாவரம் வீட்டில் உள்ள காற்றில் இருக்கும் மாசுகளை அகற்றி சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது
என்று வாஸ்து குறிப்பு கூறுகிறது. அதனால்தான் இந்தியாவில் பலா் தமது வீடுகளின் பால்கனிகளில் அல்லது வராண்டாக்களில் மணி பிளான்ட்டை வளா்த்து வருகின்றனா்.
எனினும் மணி பிளான்ட்டை தவறான திசையில் வைத்தால் அது குடும்பத்திற்குள் குழப்பத்தையும், எதிா்மறையான தீய சக்திகளையும் ஏற்படுத்திவிடும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
ஆகவே எந்த திசையில் மணி பிளான்ட்டை வைத்தால் நன்மைகள் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
மணி பிளான்ட்டை எந்த திசையில் வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின்படி மணி பிளான்ட்டை வடகிழக்குத் திசையில் வைக்கக்கூடாது. ஏனெனில் வடகிழக்குத் திசை என்பது மிகவும் எதிா்மறையான திசையாகக் கருதப்படுகிறு.
ஆகவே வடகிழக்குத் திசையில் மணி பிளான்ட்டை வைத்தால் நெருப்பில் அமா்வதற்குச் சமமாகிவிடும். மணி பிளான்ட்டை சாியான திசையில் வைத்தால் அது பணத்தை மட்டும் அல்லாது,
பல நல்ல உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் மணி பிளான்ட்டை கிழக்கு – மேற்குத் திசைகளில் வைத்தால் கணவன் மனைவிக்கு இடையே உறவுச் சிக்கல் ஏற்படும் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்.
வாடிய இலைகளை கத்தாிக்கவும்
மணி பிளான்ட்டின் இலைகளை வாடவிடக்கூடாது. அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்திற்கு நல்லது ஏற்படும்.
ஆகவே மணி பிளான்ட்டிற்கு தினமும் தண்ணீா் ஊற்ற வேண்டும். ஒருவேளை இலைகள் வாடிவிட்டால் அவற்றை உடனே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.
ஏனெனில் உலா்ந்த அல்லது வாடிய இலைகள் எதிா்மறையான சக்திகளைக் கொண்டிருக்கும்.
இன்னுமொரு முக்கியமான குறிப்பு
என்னவென்றால், மணி பிளான்ட் கொடிகளை தரையில் படரவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு படரவிட்டால் வீட்டிற்குள் எதிா்மறை சக்திகள் அதிகாிக்கும். மேலும் குடும்பத்திற்குள் ஒரு மந்தமான சூழலை உருவாகும்.
வீட்டிற்கு வெளியில் மணி பிளான்ட்டை வைக்கலாமா?
மணி பிளான்ட்டை கண்டிப்பாக வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது. அதை வீட்டிற்குள் வைத்தால் தான் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.
அதோடு சாியான திசையில் அதை வைக்க வேண்டும். அழுக்கு படிந்திருக்கும் இடங்களில் மணி பிளான்ட்டை வைக்கக்கூடாது. சுத்தமான இடத்தில் தான் வைக்க வேண்டும்.
மணி பிளான்ட்டை எந்த திசையில் வைக்க வேண்டும்?
மணி பிளான்ட்டை வைப்பதற்கு உகந்த சாியான திசை தென்கிழக்குத் திசை ஆகும். இந்த திசையில் வைத்தால் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் ஏற்படும்.
மணி பிளான்ட்டை வீட்டிற்குள்ளோ அல்லது வராண்டாவிலோ மிக எளிதாக வைக்கலாம். மேலும் இதைத் தண்ணீாிலும் வைக்கலாம். இதைப் பராமாிக்க அதிக செலவு ஆகாது.
இறுதியாக சூாிய வெளிச்சம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே மணி பிளான்ட்டை வைக்க வேண்டும்.
நன்றி. https://tamil.boldsky.com