சமையல் குறிப்புகள்

மீன் குழம்பை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் தூக்கத்திலும் வாயை மெல்லுவீங்க..!அவ்வளவு சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்- ஒரு கப்+நான்கைந்து

பூண்டு- ஒரு கைப்பிடி அளவு+ ஒரு டீஸ்பூன்

மிளகு-கால் டீஸ்பூன்

பெரிய தக்காளி-2

மிளகாய் தூள்-இரண்டு டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய்- கால் கப்

கடுகு-ஒரு டீஸ்பூன்

குழம்பு மல்லித்தூள்- 3 டேபிள்ஸ்பூன்

சாதாரண மிளகாய் தூள் -ஒரு டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

தண்ணீர்- தேவையான அளவு

புளி-சிறிதளவு

வெந்தயம்- கால் டீஸ்பூன்

சீரகம்- ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய்- இரண்டு

கறிவேப்பிலை- ஒரு கொத்து

தேங்காய் பால்- சிறிதளவு

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் நான்கைந்து சின்ன வெங்காயம் சேர்த்து கூடவே ஒரு கைப்பிடி அளவு பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் கால் டீஸ்பூன் மிளகு, பெரிய தக்காளி ஒன்று,இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் 3 டேபிள்ஸ்பூன் குழம்பு மல்லித்தூள் சேர்க்க வேண்டும்.

(குழம்பு மல்லித்தூள் இல்லை என்றால் சாதாரண மல்லித்தூள் இரண்டு டேபிள் ஸ்பூனுடன் சீரகத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,மிளகு ஒரு டேபிள் ஸ்பூன் என சேர்த்துக்கொள்ள வேண்டும்).

பின்னர் ஒரு டீஸ்பூன் அளவு சாதாரண மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து ஃபைன் பேஸ்ட்டாக அரைத்து எடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு பவுலில் இரண்டு சிறிய நெல்லிக்காய் அளவுக்கு புளியை எடுத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய புளியை பேஸ்ட் போல நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கடாயை சூடு பண்ணி நல்லெண்ணெய் கால் கப் சேர்த்து சூடாகியதும் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து நன்றாக பொரிந்ததும்  கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்க்க வேண்டும்.

பின்னர் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். நன்றாக பொரிந்த பின் ஒரு கப் சிறிய வெங்காயம் பொடியாக அரிந்து சேர்க்க வேண்டும்.பின்னர் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு பூண்டு விழுந்து நசுக்கி சேர்க்க வேண்டும்.

அவற்றை நன்றாக கலந்து விட்ட பின் வெங்காயம் ஓரளவு வெந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிய விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கி கண்ணாடி பதம் வந்ததும் பெரிய தக்காளி ஒன்றை வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்த பேஸ்டைசேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை அனைத்தும் முழுமையாக போன பின் கரைத்து வைத்த புளித்தண்ணியை சேர்த்து கலந்து விட வேண்டும்.பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து ஹை ஃப்ளேமில் வைத்து ஐந்து தொடக்கம் 10 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்ததும் ஸ்டவ்வை லோபிளேமில் வைத்து எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் வரை ஐந்து நிமிடம் அளவில் மூடி வைக்க வேண்டும். அதன் பின் பாதி தேங்காயின் கெட்டியான தேங்காய் பாலை எடுத்து சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் ஒரு கொதி வந்ததும் லோஃபிளேமில் வைத்துவிட்டு ஐந்து நிமிடத்திற்கு மூடி விட வேண்டும்.பின்னர் எண்ணெய் பிரிந்து வந்ததும் மீனை உள்ளே சேர்த்து மூடி இரண்டு நிமிடம் வரை வேக வைத்து ஸ்டவ்வை ஆஃப் பண்ணினால் சரி அவ்வளவுதான்.

கமகமனு வாசனையுடன் அருமையான மீன் குழம்பு ரெடி…

Related Articles

Back to top button