ஆன்மிகம்

கண்திருஷ்டி நீங்க இந்த கிழமையில் கற்பூரத்தினை வைத்து இது போல் செய்தால் போதும் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கும் , தீய சக்தி நீங்கி செல்வம் பெருகும்.

கண்திருஷ்டி நீங்க இந்த கிழமையில் கற்பூரத்தினை வைத்து இது போல் செய்தால் போதும் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கும் , தீய சக்தி நீங்கி செல்வம் பெருகும்.

ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் நல்லவர்களைக்கூட கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

நோய் நொடிகள் வந்து பாடாய் படுத்தும். எனவே கண் திருஷ்டி நீங்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அது எளிமையான பரிகாரம்தான்.

உங்கள் வீட்டு வாசலில் இந்த ஒரு பொருளை கட்டி தொங்க விட்டால் போதும் கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போய் விடும்

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பைதான் அவ்வாறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும்.

ஏன் இப்படி என்று யோசித்தாலோ அல்லது கோவிலுக்கு சென்று பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டாலோ கண் திருஷ்டியின் தாக்குதல் அதிகம் பாதித்து இருப்பதாக சொல்லி அதற்கேற்ப பரிகாரமும் சொல்வார்கள்.

கண் திருஷ்டி போக சில பரிகாரங்களையும் சொல்வார்கள். எளிதான அந்த பரிகாரத்தை ஞாயிற்றுகிழமைகளில் செய்ய வேண்டும்.

திருஷ்டி சுற்றி கழிப்பது ஏன்

பொதுவாக கல் உப்பு, வர மிளகாய் சேர்த்து வைத்து திருஷ்டி கழித்து வீட்டு தெருவில் முச்சந்தியில் சுற்றிப்போடுவார்கள்.

வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றி வைப்பார்கள். இது பொதுவாக திருஷ்டி கழிக்கும் முறையாகும். கல் உப்பு, வர மிளகாய்க்கு திருஷ்டியை போக்கும் சக்தி உள்ளது.

கண் திருஷ்டி போக்கும் கற்பூரம்

வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், திருமணம் முடிந்து வீடு திரும்பும் மணமக்கள், பிரசவம் முடிந்து வரும் தாய்,சேய் என பலருக்கும் திருஷ்டி கழிப்பார்கள்.

கடை, தொழிற்கூடங்களின் வாசலிலும் கூட கற்பூரம் ஏற்றி வைத்து திருஷ்டி கழிப்பார்கள் சிலர் சிதறு தேங்காய் உடைப்பார்கள்.

உடல் நல பாதிப்பு
அமாவாசை நாளிலோ,

வெள்ளிக்கிழமையன்றோ ஒருமுறை திருஷ்டி கழித்து வந்தால் தோஷங்கள் நீங்கி நமக்கு அதனால் வர கூடிய பாதிப்புகள் கட்டுப்படும் என்பது நம்முடைய நம்பிக்கையாகும்.

சிலர் எங்காவது வெளியே போய் விட்டு வந்தாலே உடல் சோர்வு, தலைவலி என அவஸ்தைப்படுவார்கள், அதற்குக் காரணம் கண் திருஷ்டிதான்.

எளிமையான பரிகாரம்

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம், மனக்கஷ்டம், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் இருப்பது கண் திருஷ்டிதான்.

இதன் மூலம் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும். இதை ஒழிக்க எளிமையான பரிகாரம் ஒன்று உள்ளது. அதை ஞாயிறன்றுதான் செய்ய வேண்டும்.

சூரியன் மறையும் முன் செய்ய வேண்டும்

ஞாயிற்றுகிழமை மாலையில் சூரியன் மறைவதற்கு முன்னர் இதை செய்வது நல்லது.

சிவப்பு துணியை விரித்து அதில் மூன்று பூண்டு பற்களை உரித்து சேருங்கள்.

அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சாம்பிராணி பவுடர், ஒரு துண்டு அடுப்புக்கரி ஆகியவற்றை சேர்த்து மூட்டையாகக் முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ளுங்கள்.

பின்பு அதனை உங்கள் தலை வாசல் படியில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். யாருடைய கைகளிலும் தலையிலும் இது உரசக்கூடாது.

செய்வினைகள் நீங்கும்

அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இது அப்படியே இருக்க வேண்டும். பின்பு மறு வாரம் இதே போல அதை தூக்கி வீசி விட்டு இதே போல வேறு ஒன்றை செய்து மாற்றவும்.

இது போல் தொடர்ந்து செய்து வரும் பொழுது எவ்வகையான செய்வினையும் உங்களை நெருங்க கூட செய்யாது. கண்திருஷ்டி நீங்கும் வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.

நோய்கள் நீங்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து விட்டு உங்களுக்கு எப்படி உள்ளது என்று கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே.

நன்றி. tamil.oneindia

Related Articles

Back to top button