ஆன்மிகம்

வாஸ்துப்படி, இந்த விலங்குகளின் சிலைகளை வீட்டின் இந்த திசையில் வைத்தால் போதும் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் நீங்கி நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேரும்

வாஸ்துப்படி, இந்த விலங்குகளின் சிலைகளை வீட்டின் இந்த திசையில் வைத்தால் போதும் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் நீங்கி நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேரும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும், ஒவ்வொரு பொருட்களும் சரியான திசையில் இருக்க வேண்டும்.

இவற்றில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது வீட்டில் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தி, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளைப் போக்க வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் ஒன்று குறிப்பிட்ட விலங்குகள் அல்லது பறவைகளின் சிலைகளை வீட்டில் வைப்பது.

இப்படி வைக்கும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, வீட்டு சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும்.

அதோடு வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தும். இப்போது அந்த சிலைகள் எவையென்பதையும், அவற்றை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதையும் காண்போம்.

யானை

வாஸ்து சாஸ்திரத்தில் யானை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட யானையின் சிலையை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைப்பது இன்னும் நல்லது.

இப்படி வைப்பதனால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். மேலும் படிக்கும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

ஆமை

வாஸ்து சாஸ்திரத்தில் ஆமை அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் முக்கியமான விலங்காக கருதப்படுகிறது.

இந்த ஆமையின் சிலையை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

முக்கியமாக ஆமையை சிலையை வீட்டில் வைத்திருந்தால், குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

குதிரை

வாஸ்து சாஸ்திரத்தில் வெற்றி மற்றும் செழிப்பின் சின்னமாக குதிரை கருதப்படுகிறது.

இந்த குதிரையின் சிலையை வீட்டின் தெற்கு திசையில், அதுவும் வீட்டிற்குள் வரும்படியான நிலையில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

நாய்

நன்றியுள்ள மிருகம். இந்த நாயை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பதே மிகவும் நல்லது.

ஒருவேளை உங்களுக்கு நாய் வளர்க்க பிடிக்காவிட்டால், நாயின் சிலைகளை வீட்டின் எந்த திசையிலும் வைக்கலாம்.

இப்படி வைப்பது, வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும்.

மான்

அழகாக துள்ளிக் குதித்து ஓடும் மான் சிலைகளை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திருப்பது மிகவும் நல்லதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இப்படி வைப்பதனால் வீட்டில் அமைதி நிலவும் மற்றும் பிரச்சனைகள் குறையும்.

சிங்கம்

வாஸ்து சாஸ்திரத்தில் சிங்கத்தின் சிலையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த சிலையை வீட்டின் தென்மேற்கு திசையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் வீட்டில் உள்ளோர் பல வெற்றிகளையும் காண்பார்கள்

நன்றி. tamil.boldsky

இந்த பதிவு tamil.boldsky எனும் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்.

இந்த தவினை நீக்குவது தொடர்பில் fmthadam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரியபடுத்துங்கள்

Related Articles

Back to top button