Uncategorized

வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? இந்த திசையில் இந்த செடியை வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் உங்களை தேடி வரும்.

வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? இந்த திசையில் இந்த செடியை வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் உங்களை தேடி வரும்.

மருத்துவ குணம் கொண்ட மிகவும் புனிதமாக செடி தான் துளசி. இந்த துளசி செடியானது தென்னிந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்து மதத்தின் படி, துளசி லட்சுமி தேவியின் வடிவமாக பார்க்கப்படும் ஒரு மரியாதைக்குரிய செடியாகும்.

வாஸ்துப்படி, இந்த புனிதமான செடியை வீட்டில் வளர்த்தால், சுற்றுச்சூழல் சுத்தமாவதோடு, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

ஆனால் வீட்டில் துளசியை செடியை வளர்த்தால், அந்த செடியை தவறாமல் காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தில் துளசி செடியை வீட்டில் வைக்க சில விதிகள் உள்ளன. அந்த விதிகளைப் பின்பற்றாமல் துளசி செடியை வீட்டில் வளர்த்தால், நற்பலனுக்கு பதிலாக கெடுபலன்களே அதிகம் கிடைக்கும்.

குறிப்பாக பண பிரச்சனை வீட்டில் அதிகரிக்கும். இப்போது வீட்டில் துளசி செடியை வைக்க வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள விதிகளைக் காண்போம்.

எந்த திசையில் துளசி செடியை வைக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வீட்டின் கிழக்கு திசையில் வைப்பது நல்லது.

இல்லாவிட்டால், வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைப்பது நல்லது. வாஸ்துப்படி வடக்கு திசையானது நீரின் திசையாகும்.

எனவே இந்த வடக்கு திசையில் துளசி செடியை வைத்து வளர்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படும்.

வாஸ்துப்படி செய்யக்கூடாதவைகள்

துளசி செடியை வீட்டில் வைப்பதாக இருந்தால், அந்த செடிக்கு அருகே துடைப்பம், காலணி, குப்பைத் தொட்டிகளை வைக்கக்கூடாது. மேலும் துளசி செடி உள்ள பகுதி எப்போதும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

துளசியை தரையில் வைக்கக்கூடாது

துளசி செடி புனிதமான செடியாக கருதப்படுவதோடு வழிபடப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி செடிகளை நேரடியாக தரையில் வளர்க்கக்கூடாது.

எப்போதும் அதை ஒரு தொட்டியில் தான் வளர்க்க வேண்டும். அதுவும் இந்த துளசியை வீட்டின் வடக்கு திசையில் உள்ள ஜன்னல் அல்லது பால்கனியில் வைத்து வளர்ப்பது நல்லது.

எத்தனை செடியை வளர்க்கலாம்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் துளசி செடியை வளர்ப்பதாக இருந்தால், ஒன்று, மூன்று அல்லது ஐந்து என்று ஒற்றைப்படை எண்ணில் தான் வளர்க்க வேண்டும்.

அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். மேலும் துளசி செடியை வீட்டில் வளர்க்க நினைத்தால், கார்த்திகை மாதத்தில் வரும் வியாழக்கிழமைகளில் வளர்க்கத் தொடங்குங்கள்.

எந்த திசையில் துளசி செடியை வைக்கக்கூடாது?

வீட்டில் துளசி செடியை வளர்க்க நினைத்தால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள திசைகளில் வைத்து வளர்த்தால் தான், நல்ல பலன்கள் கிடைக்கும்.

வாஸ்துப்படி, துளசி செடியை வீட்டின் தென் கிழக்கு திசையில் வைத்து வளர்க்கக்கூடாது. ஏனெனில் இது அக்னி மூலை. இந்த திசையில் வைத்தால் வீட்டில் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

நன்றி. https://tamil.boldsky.com/

இந்த பதிவு https://tamil.boldsky.com/ எனும் இணையதத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த பதிவினை நீக்குவது எனின் fmthadam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரிய படுத்துங்கள்.

Related Articles

Back to top button