ஆன்மிகம்

வாஸ்துப்படி லட்சுமி தேவியின் இந்த வடிவ போட்டோவை வீட்டில் இந்த திசையில் வையுங்கள் லட்சுமி தேவியின் மனமும் குளிரும். பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வாஸ்துப்படி லட்சுமி தேவியின் இந்த வடிவ போட்டோவை வீட்டில் இந்த திசையில் வையுங்கள் லட்சுமி தேவியின் மனமும் குளிரும். பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

 

இந்து மதத்தில் லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றிருந்தால், செல்வ செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். எனவே ஒவ்வொருவரும் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற விரும்புவோம்.

அதற்காக லட்சுமி தேவியின் போட்டோவை அனைவருமே தங்களின் வீடுகளில் வைத்து பூஜை செய்து வணங்கி வருவோம். ஆனால் நிறைய பேருக்கு லட்சுமி தேவியை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எந்த வடிவ லட்சுமி தேவியின் போட்டோவை வீட்டில் வைத்திருக்க வழிபட வேண்டும் என்பன குறித்து தெரிந்திருக்காது.

எனவே அத்தகையவர்களுக்காக, வாஸ்துப்படி லட்சுமி தேவியின் போட்டோவை எங்கு, எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, லட்சுமி தேவியின் போட்டோவை சரியான இடத்தில் வைத்து வழிபட்டு நன்மை பெறுங்கள்.

லட்சுமி தேவியின் போட்டோவை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

வீட்டில் லட்சுமி தேவியின் போட்டோவை வைக்க சிறந்த பகுதி என்றால் அது வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் உள்ள வடகிழக்கு மூலை தான். இந்த வடகிழக்கு மூலையானது ஈசான மூலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த மூலை தான் பூஜை அறை அமைக்க சிறந்த பகுதி. வடகிழக்கு மூலையில் பூஜை அறையை அமைத்து லட்சுமி தேவி வழிபடும் போது, வழிபடும் நபர் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்.

முக்கியமாக லட்சுமி தேவியின் போட்டோவை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. மேலும் ஒரு வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட லட்சுமி தேவியின் போட்டோவையும் வைக்கக்கூடாது.

லட்சுமி தேவியின் போட்டோவை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்?

லட்சுமி தேவியின் போட்டோவை வைக்க சிறந்த இடம் வீட்டின் வடகிழக்கு பகுதி தான்.

மேலும் லட்சுமி தேவியின் போட்டோவை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது லட்சுமி தேவி மேற்கு திசையை பார்த்தவாறு இருப்பார்.

மேலும் லட்சுமி தேவிக்கு பூஜை செய்யும் போது, வழிபடும் நபர் வடக்கு திசையையோ அல்லது கிழக்கு திசையையோ பார்த்தவாறு வழிபட வேண்டும். நின்ற நிலையில் உள்ள லட்சுமி சிலையை வீட்டில் வைக்கலாமா?

வீட்டில் எப்போதும் நின்ற நிலையில் உள்ள லட்சுமி சிலையை வைக்கக்கூடாது. அதற்காக இந்த நிலையில் உள்ள லட்சுமி அசுபமானது அல்ல. இந்த நிலையில் இருக்கும் லட்சுமி தேவியின் அருள் நீண்ட நாட்கள் கிடைக்காது என்பது நம்பிக்கை.

அதேப் போல் லட்சுமி தேவி ஆந்தை வாகனத்தில் பயணிக்கும் படியான போட்டோ அல்லது சிலையையும் வீட்டில் வைக்கக்கூடாது.

வீட்டில் லட்சுமி தேவியின் போட்டோவை வைக்கும் முன் நினைவில் கொள்ள

வேண்டியவைகள்: *

வீட்டில் லட்சுமி தேவியின் போட்டோவை வைப்பதாக இருந்தால், தாமரையில் அமர்ந்தபடி இருக்கும் போட்டோவை வைக்க வேண்டும். *

நின்ற நிலையில் உள்ள லட்சுமி தேவியின் போட்டோவை வீட்டில் வைக்கக்கூடாது. *

லட்சுமி தேவியின் பாதங்கள் தெரியும்படியான போட்டோவை வீட்டில் வைக்கக்கூடாது. *

இரண்டு பக்கமும் யானையைக் கொண்ட லட்சுமி தேவியின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. *

லட்சுமி தேவி சிரித்தவாறு, இரண்டு கைகளாலும் அருளை பொழியுமாறான போட்டோவை வீட்டில் வைக்கலாம்.

Related Articles

Back to top button