ஆன்மிகம்

இந்த 3 பொருட்களை மறந்தும் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். வீட்டில் தரித்திரம் உண்டாகும் கடன் மேல் கடன் அதிகரிக்கும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

இந்த 3 பொருட்களை மறந்தும் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். வீட்டில் தரித்திரம் உண்டாகும் கடன் மேல் கடன் அதிகரிக்கும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

வீட்டில் நாம் பயன்படுத்திய சில பொருட்களை தானம் செய்ய நேர்ந்தால் அதை முறையாக தானம் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால் வீட்டில் இருக்கும் செல்வங்கள், தானியங்கள் அழிந்து வறுமை உண்டாகும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

தானம்

வீட்டில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்றாக நாம் தானம் செய்வது வஸ்திர தானம் ஆகும். எண்ணற்ற வஸ்திரங்களை நாம் வைத்திருந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. தேவையான வஸ்திரங்களை மட்டுமே நேர்த்தியாக அடுக்கி, அழகாக மடித்து வைத்திருக்க வேண்டும்.

அளவு பத்தாத வஸ்திரங்கள் அல்லது பயன்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் வஸ்திரங்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். அப்படி தானம் செய்யும் முன்னர் உப்பு தண்ணீரில் ஒரு முறை நனைத்து பிழிந்து நன்கு காய வைத்து எடுத்து வையுங்கள்.

அதன் பிறகு அதை வேண்டப்பட்டவர்களுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இது உங்களை மென்மேலும் செல்வந்தராக செய்யும்.

கிழிந்த துணி மணிகள் அல்லது உபயோகமே படுத்த முடியாத நிலையில் இருக்கும் துணிமணிகளை தானம் செய்தால் பாவம் வந்து சேரும். இதனால் உங்களுடைய செல்வமானது அழிய துவங்கும். இத்தகைய துணிமணிகளை எரித்து விடுவது நன்மை தரும்.

தானம் செய்ய கூடாத பொருள்

உப்பு

அது மட்டும் அல்லாமல் முக்கியமாக வீட்டில் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகின்ற கல் உப்பு அல்லது உப்பு எதுவாகினும் மற்றவர்களுக்கு எந்த நிலையிலும், எந்த வகையிலும் தானம் செய்யவே கூடாது.

மகாவிஷ்ணு, மகாலட்சுமி அம்சமாக கருதப்படும் இந்த பாற்கடல் உப்பை வீட்டிலிருந்து மற்றவர்கள் கேட்கிறார்கள் என்று கைகளால் எடுத்துக் கொடுக்கக் கூடாது.

வீட்டில் வந்து சேர்க்கப்பட்ட உப்பானது மிகவும் மகத்துவமானது இந்த உப்பை தானம் செய்து விட்டால் உங்களிடம் இருக்கும் செல்வமானது கரைய துவங்கும். இதை வீட்டில் இருக்கும் மஹாலக்ஷ்மியை போ என்று விரட்டுவதற்கு சமமாகும் எனவே எந்த பொருட்களை தானம் செய்தாலும் உப்பை மட்டும் தானம் செய்ய வேண்டாம்.

விளக்கு

அது போல் பயன்படுத்திய விளக்கு, குத்து விளக்கு, காமாட்சியம்மன் விளக்கு அல்லது பரம்பரையாக பயன்படுத்தி வந்த எந்த விளக்காயினும் வீட்டிலிருந்து மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது.

அது அந்த வீட்டு சொத்தாகவும், தெய்வத்திற்கு வணங்கிய ஒரு பொருளாகவும் இருப்பதால் அதை மற்றவர்கள் எடுத்துச் செல்ல நேர்ந்தால் உங்களிடம் இருக்கக்கூடிய தெய்வ அருள், தெய்வாம்சம் நீங்கிவிடும்.

எந்த விதத்திலும் உங்கள் சந்தோஷம் கெட்டுப் போகவே போகாது. இதனால் செல்வம் அழியும் என்பது நம்பிக்கை எனவே அந்த வீட்டு பெண் குழந்தைகளுக்கு கூட அதை சீதனமாக கொடுத்து அனுப்பக்கூடாது.

புதிய விளக்கை வாங்கி கொடுக்கலாம் ஆனால் பயன்படுத்திய வீட்டிற்கு உரிய விளக்கை அடகு வைப்பது, தானம் கொடுப்பது, விற்று விடுவது போன்ற விஷயங்களை செய்ய கூடாது. பழுதாகி போய்விட்டால் மட்டும் அதை போட்டுவிட்டு வேறொரு புதிய விளக்கை மாற்றிக் கொள்ளலாம்.

Related Articles

Back to top button