ஆன்மிகம்

நம்ப முடியலையே…” 3 ” ஆம் இலக்கத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்து இப்படித் தான் இருக்குமாம்..!

நம்ப முடியலையே…” 3 ” ஆம் இலக்கத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்து இப்படித் தான் இருக்குமாம்..!

3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

எப்போதுமே மற்றவர்களுக்கு நல்லது மட்டுமே செய்வார்கள். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் தங்களின் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். யாருடைய ஆசைபடாத இவர்கள் தங்களது சொந்தக்காலில் உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இவர்களிடம் அன்பும், பொறுமையும் நிறைந்து இருக்கும். இவர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிப்பார்கள்

பிரச்சனையில் சிக்கி வழிதெரியாமல் இருப்பவர்களுக்கும் நிச்சயம் உதவி செய்வார்கள். மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

எல்லா விஷயங்களிலும் தங்களை முன்னிறுத்தி கொள்ள நினைப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம் அதிகம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் நல்ல வாய்ப்புகளை வாழ்க்கையில் இழந்திருப்பார்கள்.

இவர்கள் நிர்வாகத்திறன் மிகுந்தவர்கள். இவர்கள் மற்றவர்களை தட்டிக் கொடுத்தும், கண்டித்தும் வேலை வாங்குவதில் சிறந்தவர்கள்.

இவர்கள் எப்பொழுதும் பிறருக்கு நாணயமாக நடந்து கொள்வார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

இவர்கள் எப்படி அடுத்தவர்களிடம் மரியாதையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்கிறார்களோ அதைப்போலவே மற்றவர்கள் இவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்கள் பழைய சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

அன்பிற்கு அடிபணியும் இவர்கள் அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள்.

தனக்கு துன்பம் இழைத்தவர்களையும் செய்தவர்களையும் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள்.

எல்லாவற்றையும் புதுவி கண்ணோட்டத்துடன் காண்பார்கள். இவர்கள் மிக சிறந்த லட்சியவாதிகள் ஆவார்கள்.

இவர்கள் தேவையில்லாமல் பேச மாட்டார்கள். எப்போதும் மௌனமாக இருந்தே காரியத்தை சாதித்து கொள்வார்கள்.

இவர்கள் பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தெரிந்தாலும், மனதால் வெள்ளை குணம் கொண்டவர்கள்.

உடலமைப்பு

இவர்களுக்கு நல்ல மிடுக்கான தோற்றமும், நடுத்தரமான உயரமும் இருக்கும். முகத்தில் வசீகரம் மிகுந்திருக்கும். காந்தம் போன்ற பார்வை கொண்டவர்கள்.

இவர்களுக்கு அழகான புருவ அமைப்பு இருக்கும். எப்போதும் இவர்கள் புன்னகையுடனே காட்சி அளிப்பார்கள். பெண்களாக இருப்பின் தலைமுடி நன்கு நீண்டு இருக்கும்

நடுத்தர உயரமுடையவர்கள்.

முகமானது சற்று நீண்டிருக்கும். புருவங்கள் அடர்ந்தும் நீண்டும் இருக்கும். பெரிய உதடுகள் அமையும். பல் வரிசையாக இருக்கும்.

தலைமுடி நரைத்தல், வழுக்கை விழுதல் இளமையிலேயே ஏற்படும். நடக்கும்பொழுது நிமிர்ந்து நேர்கொண்டு நடப்பார்கள். மார்பு அகன்று விரிந்து காணப்படும்.

குடும்பம், உறவுகள்

இவர்கள் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள்.

குடும்ப கௌரவத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாரம்பரியத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.

நண்பர்கள்

இவர்கள் பல துறைகளிலும் நண்பர்களை பெற்றிருப்பார்கள். வெள்ளை மனதுடன் நண்பர்களுக்கு பெரும் உதவியாய் எப்பொழுதும் இருப்பார்கள்.

இவர்களுக்கு 2, 11, 20, 29, 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல நண்பர்களாக அமைவார்கள். கூட்டு எண் 3 மற்றும் 9 என வரும் நண்பர்களும் மிகவும் உதவுவார்கள்.

மேற்கண்ட எண்களில் பிறந்தவர்களைக் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் வைத்துக் கொள்ளலாம். 2ம் எண் காரர்களாலும் நன்மை ஏற்படும்.

திருமண வாழ்க்கை

இளமைக்காலத்தில் காதல் வசப்படுவார்கள். அழகிய பெண் வாழ்க்கை துணைவியாக அமைவாள்.

இவர்களின் வாழ்க்கைத்துணை அனைவரிடமும் அன்பாகவும், அடக்கத்துடனும் நடந்து கொள்வார்.

கணவன்-மனைவி இருவரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.

கணவன், மனைவி அமையும் விஷயத்தில் 3ஆம் எண்காரர்கள் நல்ல பாக்கியசாலியாக இருப்பார்கள்.

குடும்பத்தில் கால சூழ்நிலைகளை அனுசரித்து மனநிறைவுடன் வாழ்வார்கள். வாழ்வின் முன்னேற்றத்திற்காக இருவரும் அயராது உழைப்பார்கள்.

தொழில்

இவர்கள் சமுகத்தில் உயர்ந்த பதவியை வகிப்பார்கள். இவர்களுக்கு ஒரு துறையில் மட்டுமின்றி பல துறைகளில் அதிகம் நாட்டம் இருக்கும்.

தொலைப்பேசியின் மூலம் பொருள் சேர்க்கும் பாக்கியம் இவர்களுக்கு உண்டு.

இவர்கள் சிறந்த தொழிலதிபராகவும், நீதியை நிலை நாட்டும் சட்ட வல்லுநராகவும், வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் விளங்குவார்கள்.

அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.

பொன், பொருள், நவரத்தினம் வைத்து தொழில் செய்வார்கள். புகழ்பெற்ற மருத்துவராகவும், சித்த வைத்திய நிபுணர்களாகவும், புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், மத குருவாகவும், நன்னெறிகளை போதிக்கும் ஞானியாகவும் விளங்குவார்கள்.

இவர்கள் கமிஷன், ஏஜென்சி, கான்கிரீட் போன்ற தொழில்களால் பணம் புரட்டுவார்கள்.

இவர்கள் சாஸ்திர ஆராய்ச்சி, பௌதீக ஆராய்ச்சி, மின்னியல் கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் மேன்மை அடைவார்கள்.

இயந்திரக் கருவிகள், கெமிக்கல், கலை சம்பந்தப்பட்ட தொழில்களில் லாபம் ஈட்டுவார்கள்.

மேடை பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பேப்பர் கடைகள், அச்சுத்தொழில், வங்கி, கல்லூரி பேராசிரியர்கள், தத்துவ பேராசிரியர்கள், மேலாளர்கள், இன்சூரன்ஸ், ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும்

அதிர்ஷ்ட தினங்கள்

இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 தேதிகள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதேபோன்று கூட்டு எண் 3 அல்லது 9 வரும் எண்களும் பலன்களைத் தரும்.

ஒவ்வொரு மாதத்திலும் 6, 8, 15, 17, 24, 26 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 6 அல்லது 8 வரும் தேதிகளிலும் புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்-நோய்
இவர்கள் மஞ்சள் நிறம் கொண்ட உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது. கோதுமை, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, தக்காளி போன்றவை மிகவும் சிறப்பானது. நோய்களிலிருந்து விடுபட நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளும் உடலுக்கு வலுவூட்டும்.

இவர்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம். இவர்களின் உடலில் தோல் அலர்ஜி எனும் ஒவ்வாமை குணம் ஏற்படும். கல்லீரல், இடுப்பு, தொடை, கால்கள் இவற்றை குரு ஆட்சி செய்கின்றார். அதனால் இவர்கள் நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்வதன் மூலம் இவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைவை சீர் செய்ய முடியும்.

திர்ஷ்ட இரத்தினம், உலோகம்
இவர்களுக்கு தங்கம் சிறந்த நன்மையை கொடுக்கும். பொன்நிற உடைகள் அதிர்ஷ்டத்தைத் தரும். செவ்வந்திக் கல் எனப்படும் கற்கள் மிகவும் யோகமானவை. புஷ்பராகம் கற்களும் நல்ல பலன்களைத் தரும். கனகபுஷ்பராகம் கல்லும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்
இவர்களுக்கு ஊதா மற்றும் நீலம் கலந்த வண்ணங்ககள் சிறப்புத் தரும். மஞ்சள் நிறமும் நன்மை அளிக்கக்கூடியதே. கருநீலம், கருப்பு, பச்சை நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.

தேதி வாரியாக பொதுவான பலன்கள்

3-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் சிந்தனை சக்தி அதிகம் கொண்டவர்கள். தங்களுடைய ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி காண்பார்கள்.

பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் வல்லுநர்களாக இருப்பார்கள். சிறந்த எழுத்தாளராகவும் இருப்பார்கள்.

கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். இவர்களின் வாழ்வில் 21 வயதிற்கு மேல்தான் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

12-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்களுக்கு தாய், தந்தையின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். உறவினர்களால் எள்ளவும் இவர்களுக்கு பயன் இல்லை.

அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையும் பாதிக்கப்படலாம்.

மற்றவர்களுக்காகவே உழைப்பார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில் இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறுவார்கள்.

தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகள் தேடிவரும்.

21-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்களுக்கு சுயநலம் சிறிது அதிகம். வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் கண்டாலும் வெற்றி பெறும்வரை சலிக்காமல் உழைப்பார்கள்.

நடுவயதில் இவர்கள் பல பிரச்சினைகளை சந்திப்பார்கள். புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள்.

அதன் மூலம் பெரும் புகழும், செல்வமும் அடைவார்கள். எழுத்தும், பத்திரிகைத் தொழிலும் நன்கு அமையும்.

30-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த திறமைசாலிகள், பணம் சம்பாதிப்பதை சுயதிருப்தியை பிரதானமாக நினைப்பார்கள். எதையும் துருவித் துருவி ஆராயும் குணம் உண்டு. இவர்கள் சாகச விரும்பிகள்.

பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழித்துப் பின்பு வருந்துவார்கள்.

கௌரவம் எப்போதும் கிடைக்கும். தனிமையிலே சிந்திப்பதில் நாட்டம் உள்ளவர்கள். அரசியல் தொடர்பும் ஏற்படும். படிப்பறிவைக் கொடுக்கும் எண் இது.

Related Articles

Back to top button