சமையல் குறிப்புகள்

இந்த பொருட்களை மறந்தும் யாருக்கும் கொடுக்காதீர்கள் கொடுத்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் கடன் மேல் கடன் அதிகரிக்கும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

இந்த பொருட்களை மறந்தும் யாருக்கும் கொடுக்காதீர்கள் கொடுத்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் கடன் மேல் கடன் அதிகரிக்கும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

நாம் சில பொருட்களை கடனாகவோ, தானமாகவோ கொடுத்தால் அது நமக்கு கண்டிப்பாக தரித்திரத்தை கொடுக்கும். எந்த பொருட்களை தானமாக கொடுக்க கூடாது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

துடைப்பம்நாம் வீட்டில் பயன்படுத்தும் துடைப்பத்தை யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது.

துடைப்பத்தில் மகாலெட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை உள்ளது.
அதானல் இந்த துடைப்பத்தை கண்டிப்பான பக்கத்து
வீட்டிகாரர்களுக்கு தானமாகவோ கடனாகவோ கொடுக்க கூடாது

மகாலட்சுமி வாசம் செய்வதில் மிகவும் பிரதானமான பொருள் உப்பு. நாம் வீட்டில் பயன்படுத்தும் உப்பை கடனாகவோ தானமாகவோ யாருக்கும் கொடுக்க கூடாது.

அதேபோல் நாமும் உப்பை தானமாக யாரிடமும் வாங்க கூடாது. நாம் எத்தனை நெருக்கமாக பழகினாலும் யாருக்கும் உப்பை கடனாக கொடுக்க கூடாது. நாம் யாரிடமாவது வாங்கினாலும் உடனே பணத்தை கொடுத்து விட வேண்டும்.

வஸ்திர தானம் என்பது மிகவும் நல்லது. ஆயுளை நீட்டிக்கும். பெரிய புண்ணியத்தை சேர்க்கும் .

ஆனால் அதற்கு புதிதாக துணிகளை தனியாக வாங்கி தானம் கொடுக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் லேசாக நெருப்பு பட்ட கிழிந்த துணிகளை கண்டிப்பாக தானமாக கொடுக்க கூடாது.

லேசாக கிழிந்த துணிகளையும் கண்டிப்பாக தானம் பண்ண கூடாது.சமயத்தில் நாம் நமக்காக டிரஸ் வாங்குவோம் ஆனால் அது நமக்கு மிகவும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமைந்து விடும் அதுபோன்ற துணிகளை தானம் கொடுக்கலாம்.

ஆனால் கண்டிப்பாக நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்திய துணிகளை தானமாக கொடுக்க கூடாது.

நம் வீட்டில் பயன்படுத்திய விளக்கை நாம் யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. நாம் நம் வீட்டில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்திய விளக்கை கண்டிப்பாக யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது.

முன்பு நம் வீட்டில் தீபம் ஏற்றிய விளக்கு இப்போது நம் வீட்டில் பயன்படுத்தா விட்டாலும் அதை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது.

அதே சமயம் புதிதாக விளக்கை வாங்கி நாம் பரிசாக அளிப்பதில் தவறு இல்லை. குறிப்பாக குத்து விளக்கை தானமாக கொடுக்க கூடாது.

நாம் வீட்டில் பயன்படுத்தும் கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், அரிவாள், அரிவாள்மனை, ஊசி சுத்தியல், போன்ற கூர்மையான பொருட்களை நாம் யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது.

எத்தனை பழகியவர்களாக இருந்தாலும் அரிவாள் மனை போன்ற பொருட்களை கொடுப்பது நல்லது அல்ல. தேவைப்பட்டால் நாம் அதிகமாக ஒரு அரிவாள் மனையை வாங்கி வீட்டில் வைத்து கொள்ளலாம்.

Related Articles

Back to top button