ஆன்மிகம்

பணம் மலை போல சேர இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக சேர்த்து உப்பு ஜாடியில் மறைத்து வைத்தால் போதும் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல சேர இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக சேர்த்து உப்பு ஜாடியில் மறைத்து வைத்தால் போதும் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கருவறை முதல் கல்லறை வரை மனித வாழ்வை ஆதிக்கம் செய்யும் ஓர் விடயமென்றால் அது பணம் மட்டுமே.

எதற்காகவும் காத்திருக்க வேண்டாம் இந்த நிமிடமே சரியான நேரம். ஆகவே பணத்தை காக்க பரிகாரம் என்ன என்பதை உடனே தெரிந்து கொள்வோம்.

நம் வீட்டுச் சமையலை அன்றாடம் சுவையாக்கும் ஓர் சுவையூட்டு உப்பாகும். இவ் உப்பானது செல்வத்தை வழங்கும் மகாலட்சுமியின் ஆதிக்கம் நிறைந்தது.

இக் கல் உப்பைப் பயன்படுத்தி மிக எளிதான பரிகாரம் மூலம் பணத்தையும் தங்கத்தையும் வழப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கடன் இன்றியும் வாழலாம்.

தேவையான பொருள்
விரளி மஞ்சள்,
வசம்பு
கல் உப்பு

பரிகாரம் செய்ய உகந்த நாள்

செவ்வாய் கிழமை நேரம் 6AM தொடக்கம் 7AM, வெள்ளிக் கிழமை – நேரம் 6AM தொடக்கம் 7AM வரை.

ஓர் கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். மூடி போட்ட கண்ணாடி பாட்டில் மிகச் சிறந்தது.

சமையலுக்குப் பயன்படுத்தும் கல் உப்பை எடுக்காது இதற்காக புதிய பக்கற் வாங்கி வையுங்கள். கண்ணாடி பாட்டிலினுள் கல் உப்பைப் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து மகாலட்சுமியின் அம்சமான விரளி மஞ்சளினை கல் உப்பின் நடுவில் யார் கண்ணிலும் படாத வண்ணம் வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் மருத்துவர் எனச் சிறப்பிக்கப்படும் வசம்பிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தியுண்டு.

குறித்த வசம்பானது மகாலட்சுமியின் அம்சங்களான கல் உப்பு மற்றும் விரளி மஞ்சளுடன் சேரும் தருணம் பயன் அதிகளவே கிடைக்கும்.

ஆம் குறித்த வசம்பினையும் குறித்த கண்ணாடி பாட்டிளினுள்ளே மறைத்து வையுங்கள். குறித்த பாட்டிலின் மூடியை மூடிக் கொள்ளுங்கள்.

கண் திருஷ்டி என்பது விஞ்ஞான ரீதியிலும் ஏற்புடைது என வாதிடும் அளவு உண்மையான ஒன்றாகவே கருதப்படுகின்றது.

ஒருவர் கண் திருஷ்டியினால் பீடித்திருந்தால் பணவரவு தடைபடும் மேலும் நோய் ஏற்படுவதோடு வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கும் வழியையும் உருவாக்கும்.

குறித்த கண்ணாடி பாட்டிலினை உங்கள் வீட்டுச் சமையலறையில் அல்லது பூஜை அறையிலோ வீட்டின் முக்கிய பொருட்கள் வைக்கப்படும் இடங்களில் யார் கைகளும் படாத வண்ணம் குறிப்பாக யார் கண்களில் படாத வண்ணம் வைத்துப் பாதுகாப்பாளன் ஆகுங்கள்.

உங்கள் வீட்டில் யாருக்கேனும் கண் திருஷ்டி கழிக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் முதல் பொருள் கல் உப்பு.

இந்த போத்தலில் உள்ள உப்பினைப் பயன் படுத்தும் வேளை பலன் அதிகளவில் கிடைக்கும்.

ஓர் மண்டலம் என்பது 48 நாட்களாகும். 48 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் வீட்டு சிங்கில் குறித்த கல் உப்பைக் கறைத்து விடுங்கள்.

தொடர்த்து குறித்த விரளி மஞ்சள் மற்றும்  வசம்பினையே மீண்டும் புதிய உப்புடன் பாவித்துக் கொள்ளலாம்.

குறித்த கிழமையில் குறித்த நேரத்தில் இவ் எளிய பரிகாரத்தைச் செய்து யார் கண்ணிலும் படாத வண்ணம் வைத்து உங்கள் வீட்டில் பணவரவினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button